புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் கொத்வள்ளியை சேர்ந்த முகமது சத்தாருக்கு ஷாகிரா பேகம் என்ற மனைவி இருக்கிறார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டார்.


இதனால் சத்தார் 2வது திருமணம் செய்து கொண்ட போதிலும் முதல் மனைவியுடன் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் மனநலம் பாதித்த ஷாகிரா பேகம் வீட்டில் ரகளை செய்ய தொடங்கியதைடுத்து அவர் எங்கும் ஓடிவிடாமல் இருக்க தனக்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்தார்.

ஷாகிராவுக்கு வீட்டு சுவரில் ஓட்டை போட்டு அதன் வழியாக உணவு, தண்ணீர் கொடுத்து வந்தனர்.

இதற்கிடையே பூட்டிய வீட்டில் இருந்தும் ஷாகிரா பேகம் தப்ப முயன்றிருக்கிறார்.

உடலில் சக்தி இருப்பதால் தான் அவர் தப்ப முயற்சிக்கிறார் எனக் கருதி அவருக்கு உணவு, தண்ணீர் கொடுப்பதை படிப்படியாக குறைத்ததனால் போதிய உணவு கிடைக்காமல் ஷாகிராபேகம் சித்ரவதைக்குள்ளானார்.

இந்நிலையில் கடந்த முகரம் பண்டிகையையொட்டி பாழடைந்த வீடு வழியாக ஊர்வலம் சென்றபோது வீட்டில் அடைப்பட்டு இருந்த ஷாகிரா பேகம் சுவர் ஓட்டை வழியாக கையை விட்டு பசிக்குது.. சாப்பாடு கொடுங்க, தண்ணீர் கொடுங்க... காப்பாத்துங்க... என்று கதறினார்.

அப்போதுதான் அந்த வீட்டில் பெண் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது ஊர் மக்களுக்கு தெரிய வந்தது.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top