புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எமது உறவுகளே அனைவரும் இந்த பெயரை மறந்திருக்கலாம்.ஆனால் இப்படி ஒரு மறுமலர்ச்சி மன்றம் 30 வருடங்களுக்கு முன் காலையடி தெற்க்கில் உருவாகி இயங்கிய ஒரு வாசிகசாலையே.இது ஏன் மூடப்பட்டது என்ற ஆய்வுகளுக்கு அப்பால்.இன்று அங்கு ஒரு
வாசிகசாலை, பாலர்பாடசாலை, மேலதிக கல்வி கற்றல், போன்ற பல தேவைகளை கருத்தில் கொண்ட மக்கள் புலம் பெயர் உறவுகளும் சேர்ந்து எடுக்கப்பட்ட முயற்ச்சி வெற்றியளித்துள்ளது.

காலையடி தெற்க்கின் தேவைக்கு முதல் தேவையாக ஒரு வளவு ஒன்று தேவைப்பட்டது.அதற்க்காக ஒன்றரை வருட முயற்ச்சி இன்று ஒரு வளவை காலையடி தெற்க்கு மக்களுக்காய் வாங்கி கையளித்துள்ளோம்.
03.11.2012 அன்று வளவை அளந்து கணக்கெடுக்கப்பட்டு,மீண்டும் 04.11.2012 அன்று நில அளவையாளர்மூலம் அளந்து பன்னிரண்டே முக்கால் பரப்பு என கணக்கிடப்பட்டது.இதை 05.11.2012 அன்று வழக்கறிஞ்ஞர் திரு.சோ.தேவராசா அவர்களின் காரியாலயத்தில் வளவை பதிவுசெய்யப்பட்டது.வளவு காலையடி தெற்க்கு மறுமலர்ச்சி மன்றத்தின் பெயருக்கே பதிவு செய்துள்ளனர்.எதிர் காலங்களில் மக்கள் சொத்தாக இருக்கவேண்டும் என்ற நோக்கமாகும்.இதை வாங்குவதற்க்கான நிதியை மூன்று குடும்பத்தினர் வளங்கியுள்ளார்கள். திரு.இரசையா அற்ப்புதன் குடும்பம் நெதலாண்ட். திரு.தனபாலசிங்கம் சிவகுமார் குடும்பம் சுவிஸ். திரு.சுப்பிரமணியம் நந்தகுமார் குடும்பம் கனடா. இவர்களுக்கு காலையடி மக்கள் நன்றிகள் உரித்தாக.இந்த வளவை வாங்க 30 இலடச்சத்தை வளங்கிய மூன்று குடும்பங்கள் மட்டுமே எனவும் அனைவரும் அறிந்திருக்கவேண்டும். 

இந்த திட்டத்தை வழி நடத்த இளையவர்களை உள்வாங்கவேண்டும் என்ற நோக்குடன் தற்ப்போது மூன்று இளையவர்கள் தெரிவாகியுள்ளனர். நம்பியார்ரூரான் கபிலன், சிறீதரன் நதியா, சீலன் வனிதா ஆகியோர் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களது தலைமையில் காலையடி தெற்க்கில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு மேலதிக நிர்வாக உறுப்பினர்களை தெரிவுசெய்து மேலெடுத்து செல்ல தீர்மானித்துள்ளனர்.இவர்களது இந்த முயற்ச்சியானது அனைத்து எமது உறவுகளின் பங்களிப்புகளோடு நிறைவேற்றப்படவேண்டும்.புலத்து எம் உறவுகளே எதிர்காலமாதல் காலையடி தெற்க்கு மறுமலர்ச்சி மன்றத்தால் கற்றல்,வாசித்தல்,தொழிற்கல்வி,மேலதிக்கல்வி கற்றல் என ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க சகலரும் கைகோர்த்து இந்த அரும்பெரும் பணியை நிறைவேற்ற ஒரு எறும்பாக நம் பணியை தொடருவோம். இந்த வளவை வாங்க 30 இலடச்சத்தை வளங்கிய மூன்று குடும்பங்களும் மட்டுமே.இந்த திட்டத்தை சட்ட திட்டங்களுக்கு அமைய முன்னெடுக்கும் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. 

இத்திட்டத்துக்கான வரை படங்களை வரைந்து தருவதாய் திரு அழ.சந்திரஹாசன் அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளார்.இவர் மேலும் கூறியதாவது ஊரில் மக்களுக்கு அத்திய அவசிய தேவைக்கான எந்த சமூகப்பணியானாலும் தனது கல்வி பயன்படும் என கூறியிருந்தார். அவருக்கும் காலையடி தெற்க்கு மக்கள் நன்றியை தெரிவிக்கின்றோம். எமது இந்த முயற்ச்சிக்காய் பலர் பல வகையிலும் உதவிகள் செய்துள்ளனர் அவர்களுக்கும் நன்றிகள்.எமது இந்த முயற்ச்சிக்கு எமது ஊர் இணையங்களும் எம்மோடு கைகோர்க்கவேண்டி நிற்க்கும் உங்கள் இரத்தங்கள்.எமது முயற்ச்சிகள் வீண் போகா என்ற நம்பிக்கையுடன்
நல்ல ஒரு தகவலை உங்களுடன் பரிமாறிய திருப்தியுடன் விடைபெறுகின்றோம்.

அனுப்பியவர்-த.பாலாகுமார்
தகவல்.காலையடி தெற்க்கு மறுமலர்ச்சி மன்றம்.
நிருபர்,படப்பிடிப்பாளர். பண்கொம்.நெற் மனோகரன் பரிசித்.
தொடர்பு. 0031620969987. அற்ப்புதன் நெதலான்ட்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top