புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

'
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அடுத்த கங்காவரம் மண்டலம் சிடி.மாகுலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(22). இவருக்கும் தம்பலபள்ளியைசேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2 மாதங்களுக்கு முன் பெரியோர்களால் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.



இவர்களது திருமணம் நேற்று நடக்க இருந்தது. ஆனால் நிச்சயம் செய்த பெண் தனது காதலனுடன் நேற்று முன்தினம் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அதே முகூர்த்தத்தில் திருமணம் செய்ய மணமகன் வீட்டினர் முடிவெடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சவுடேபள்ளி மண்டலம் ஆமணிகுண்டா கிராமத்தை சேர்ந்த ராஜண்ணா மகள் சசிகலா(19) என்பவருடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை கங்காவரம் அருகே உள்ள பசவேஸ்வரர் கோயிலில் பாஸ்கருக்கும், சசிகலாவுக்கும் திருமணம் நடந்தது. மணமக்களுடன் உறவினர்கள், நண்பர்கள் என புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துக்கொண்டனர்.

திருமணமான ஒருமணி நேரத்தில் மணமகள் சசிகலாவை காணவில்லை. மண்டபம் உள்பட பல்வேறு இடங்களில் இருதரப்பினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கார் ஒன்றில் மணக்கோலத்தில் சசிகலா தப்பிச்சென்ற தகவல் கிடைத்தது. இதனால் மணமகன் பாஸ்கர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பலமனேர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசாரிடம் மணமகன் கூறுகையில்

எனக்கு திருமணமே வேண்டாம். இதற்கு உரிய நியாயம் வழங்குங்கள்' என கூறியது பரிதாபமாக இருந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top