புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியின் வடபகுதியில் உறைபனியால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் வழுக்குகின்றன.இதனால் 80 விபத்துகள் நடந்துள்ளபோதும் 3 பேருக்கு மட்டும் சிறு
காயங்கள் ஏற்பட்டது.

கடந்த ஞாயிறன்று காலை, சாலைகள் மோசமாக இருந்ததனால் ஹேம்பர்கிலும் ஷ்லெஸ்விக் - ஹோல்ஸ்ட்டீனிலும் உள்ள சாலைகளில் பனியில் கார்ச்சக்கரங்கள் வழுக்கியதால் 14 கார்கள் ஒன்றின் மீது ஒன்றாக மோதிக் குவிந்தன.

இதனால் பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஹேம்பர்கில் பனி படர்ந்த நடை பாதையில் நடந்து சென்றவர்களில் நான்கு பேர் வழுக்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

சாலைகளில் 110 காவல் வண்டிகள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த முறை கிறிஸ்துமஸ் வெண்பனி விழாவாக அமையவில்லை.

ஈரம் சொட்டும் மழைப் பெருவிழாவாக அமைந்திருக்கிறது என்று தட்பவெப்ப மையம் அறிவித்தது.

கிறிஸ்துமஸ் அன்று வெப்பநிலை 7 முதல் 13 டிகிரி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top