புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இதய நோயுள்ள பெண்களை ரெண்டு விதமாப் பிரிக்கலாம். சிலர் பிறக்கற போதே இதய நோய்களோட பிறக்கறவங்க ஒரு வகை. அதுக்குப் பிறகு வர்ற இதய நோய்களாலபாதிக்கப்படறவங்க அடுத்தது. சாதாரணமா பெண்களுக்கு 5.5 லிட்டர் ரத்தம் இருக்கும். கர்ப்ப காலத்துல இது 30 சதவிகிதம் அதிகமாகும். கர்ப்பத்தோட 10-12வது வாரங்கள்லயே இது அதிகமாகத் தொடங்கும்.
இதயம் பம்ப் பண்ற வேகமும் இதயத்துடிப்பும் அதிகமாகும். ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதயம் ஆரோக்கியமா இருக்கிற பெண்களுக்கு இதெல்லாம் பிரச்னையைக் கொடுக்காது. ஆனா, பிரச்னை உள்ளவங்களோட இதயத்தால ஈடுகொடுக்க முடியாது. இதயக் கோளாறுகளை அலட்சியப்படுத்திட்டு, கர்ப்பம் தரிச்சா, முதல் 10-12 வாரங்கள்லயே கரு கலையலாம்.

இதயம் இன்னும் பழுதடையலாம். ரத்தம் உறைஞ்சு, மூளைக்கும் நுரையீரலுக்கும் போகும் ரத்தக்குழாய்கள்ல அடைப்பு உண்டாகி, பக்கவாதம் வரலாம். சில சமயம் மரணமும் நிகழலாம். சில வகை பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காம இருக்கிறதுதான் பாதுகாப்பு.

இதய வால்வுகள்ல சுருக்கம் இருந்தாலோ, இதயத்தைச் சுத்தின நான்கு சுவர்கள்ல பிரச்னை இருந்தாலோ கூட கர்ப்பம் தரிக்கிறது ரிஸ்க். வால்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடைப்புகளுக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்த பிறகு, அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கலாம். சில பெண்களுக்கு இதய வால்வ் மாற்று சிகிச்சை’
செய்யப்பட்டிருக்கும்.

அவங்களுக்கு வால்வுகளுக்குப் போகும் ரத்தம் உறையாமலிருக்க தினசரி மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை எடுத்துக்கிறப்ப, அவங்க கர்ப்பம் தரிக்கிறது சிரமம். சில சிறப்பு கேஸ்கள்ல, அவங்களுக்கு பிரத்யேக மருந்துகளைக் கொடுத்த பிறகுதான் கர்ப்பம் தரிக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

சிகிச்சை மற்றும் ஆபரேஷன் முடிஞ்ச பிறகு அந்தப் பெண் கர்ப்பம் தரிச்சாலும், கர்ப்ப காலம் முழுக்க, ஒரு இதய நோய் நிபுணரோட கண்காணிப்புல இருக்கிறது பாதுகாப்பானது. அட்வான்ஸ்டு வசதிகள் உள்ள மருத்துவமனையில பிரசவ காலத்தைச் செலவழிக்கிறது அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு.

கர்ப்பம் எத்தனை ரிஸ்க்கான விஷயமோ, அதைவிட ஆபத்தானது இதய நோயுள்ள பெண்களுக்கான கருத்தடை. எனவே இதய நோயுள்ள பெண்களுக்கு கருத்தடை பண்றதைத் தவிர்த்து, அவங்க கணவர்களுக்குப் பண்றது ரொம்பவே பாதுகாப்பானது…’’ மகப்பேறு மருத்துவர் ஜெயராணி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top