புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு




முதல் முதலில் கணணி என்ற சொல்லை நான் வெளிநாட்டில் அறிந்த காலம் இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் இணையத்தளம் ஒரு ஆரம்பித்துவிட்டு எனக்கு இணையத்தளம் இருப்பதாக பல படங்கள் கவிதைகளை போட்டு காட்டினான். பொறாமையாக இருந்தது நான் கணணி பற்றி படிக்கவில்லையே என்ற கவலை அதேநேரம்
எப்படியும் நானும் அதை பழகவேண்டும் என்ற ஆசையும் அவனிடமே கேட்டு தெரிந்துகொண்டேன் நண்பனின் ஆதரவுடன் ஒரு வேலையில் சேர்ந்தேன் .

பல நாள் கணவு பின் சொந்தமாக ஒரு கணணியையும் வாங்கினேன் அப்போதுதான் எம்மவர்களின் இணையதளவருகை இணையத்தளங்களில் இருக்கும் செய்திகளை அவர்களின் பதிவுகள் பார்த்து சந்தோஷ பட்டுகொள்வேன் எனக்கு தமிழ் எழுத தெரியும் ஆனால் கட்டுரை கவிதை இவை எல்லாம் எப்பிடி போடுவது?? நான் முதல் எழுதியும் பழக்கப்படவில்லை ... இலக்கணம் இலக்கியம் என்றால் பெயரளவில் தெரியாது தவிர அவற்றின் பங்களிப்பு மொழியிலே எப்படிபட்டது என்பது தெரியாது நான் எப்பிடி எழுதுவது என்று எனக்குள்ளே சிந்தித்து கொண்டுருத்தபோது தான் 

அந்த நேரத்தில் தான் என் நண்பன் தனது கணணியில் தமிழில் எழுதுவதை பார்த்து எப்படி எழுதுகிறாய் என்று கேட்டேன் அவனும் கூகிளில் எழுதும் முறையை சொல்லி தெரியப்படுத்தினான் பிறகு நான் எம் தாய் மொழி தமிழில் பல சொற்களை எழுதி பழக ஆரம்பித்தேன் பின் சிறிது சிறிதாக என்மவர்களின் ஒவ்வொருவரின் பதிவுகளிலும் எனது கருத்து எழுதினேன் பலர் விருப்பம் தெரிவிக்க தெரிவிக்க எனக்குள் எதோ ஒரு நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது அதன் பின் சிறிது சிறிதாக எனது பதிவுகளையும் எழுததொடக்கினேன் அதை யாரவது பார்கிறார்களா என பலமுறை பார்த்து சந்தோஷ பட்டுகொள்வேன். 

அப்போதுதான் நான் சிந்தித்தேன் இணையம் எங்களுக்கு கிடைத்து இருக்கும் ஒரு அருங்கொடை அதைஒரு சிலர் தான் அதன் மீது பழி போடுகிறோம், பல செய்திகள் வருகின்றன எங்களுக்கு தெரியாமல் பல தவறுகள் நடைபெறுகின்றன,இணையத்தை குற்றம் சொல்லுகின்றோம் உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் எம்மவர்களின் இணையம் உங்களை ஏமாற்றுகிறதா? நீங்கள் எமாற்றுவதுக்கு இணையத்தை பயன் படுத்துகிறீர்களா? பலர் கொலை செய்வதுக்கு கத்தியை பயன் படுத்தினார்கள் என்பதுக்காக அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை தடை செய்யவேண்டும் என்று சொல்வது சரியா? இணையம் எங்களே அறிவு சாந்த விடயமாகவும் ஒவ்வருடைய திறமையையும் வெளிக்கொண்டு வருகின்றது அதே போல் எம்மவர்களின் ஒன்றியங்கள் சிறார்களுக்கு கலை கலாச்சாரம் எமது மொழி சிதறி கிடக்கும் எம்மவர்களே!! ஒன்று இணைக்கும் முகமாகவும் செயல்படுகின்றார்கள். இதிலும் ஒரு சிலரின் பார்வையில்தான் தவறு தூரத்தில் இருந்து பார்க்கும் பொது இதன் அருமை பெருமை தெரியாது அருகில் வந்து பார்த்து பாருங்கள் அதற்க்குள்ளே இருக்கும் சந்தோஷம் 

முன்பெல்லாம் ஒரு விடயம் தெரியவில்லை என்றால் அதை தெரிந்து கொள்ள அது சம்பந்தமாக படித்தவரிடம் தான் தெரிந்து கொள்ளவேண்டும் இப்போது எந்த விடயத்தையும் இருந்த இடத்திலேயே நாங்களாகவே அறிந்துகொள்கிறோம். இணையம் என்பது ஒரு கொடை அதை நாங்கள் எங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள பயன் படுத்தவேண்டும். ஆனால் ஒரு சில ஊறவுகள் தங்களுடைய நேரங்களையும் தப்பான வழிகளில் வீனாக்கிரர்கள் . அவர்களிடம் எதோ ஒரு திறைமை இருக்கும் என் அவர்கள் பயன்படுத்துவதில்ல ??!! அன்று ஒன்றுமே தெரியாத நான் இன்று எழுத ஆரம்பித்து இருக்கிறேன் என்றால் பல விடயங்கள் தெரிந்த உங்களால் ஏன் முடியாது???

இணையத்தில் இப்போது மொழி அறிவு ஒரு தடை இல்லை ....எல்லா விடயங்களையும் எங்கள் மொழியிலேயே அறிந்துகொள்ளலாம் வாசியுங்கள் பல விடயங்களை வாசியுங்கள் அறிய அறிய உங்கள் அறிவு வளர்ந்துகொண்டே போகும்.வளர்ந்து வரும் வேற்று மொழிகளுக்கு இணையாக நம் தாய் மொழி தமிழையும் வழப்படுதிக்கொள்ளவேண்டும். உங்கள் கையிலேயே உங்கள் அறிவு இருக்கிறது.உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும், முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்று விரும்புகின்றனர். நீங்கள் முன்னேற, உயர, வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு, முயற்சிக்க தயாராகி விடவேண்டும்.
உங்களுக்கு எதிலும் முடியாது என்று என்னும் எண்ணம் உடனே வந்து விடும் . முடியாது என்னும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்?

ஒரு குழந்தையின் வளர்ச்சியை உற்று நோக்கினால் இந்த உண்மை தெளிவாகும்.
ஒரு குழந்தை . பிறந்தபின் நடக்கும் போது விழும். மீண்டும் அந்த குழந்தை விழும், அழும், ஆனாலும் அடங்கி இராமல் மீண்டும் எழுந்து நின்று தன் முதலாவது அடியை முன்னோக்கி எடுத்து வைக்கும். நான் விழிந்து விட்டேன் என்று மிண்டும் முயற்ச்சி செய்யவில்லையா?? குழந்தை அதே போல் தான் நீங்களும், நாங்கள் பிறக்கும் போது எதையும் கற்றுகொண்டு வரவில்லை அதை நாங்கள் தான் தேடவேணும் எங்களுக்கு தெரியாது என்று இருப்போமானால் எல்லாமே கடைசியில் தெரியாமல் போய்விடும் இப்படியாக வளர்ச்சியை நோக்கி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும், பல சுவர்களாக மாறி ஒன்றுக்கொன்று இணைந்து வெற்றி என்னும் மாளிகையாக மாறிவிடும் முயற்சியை நிறுத்தாமல் விடாமுயற்சி யாகவும் தொடர்முயற்சியாகவும் கைக்கொள்ள வேண்டும் நம் வாழ்க்கை முடியும்போது எவ்வளவு சேர்த்து வைத்தோம் என்று இருக்கக் கூடாது .எப்பிடி வாழ்ந்தோம் என்று தான் இருக்க வேண்டும் ..!

ஆனால் நாங்கள் அப்பிடியாக செயல்படுகின்றோம இல்லை.இல்லை!! 1.ஈரோ ஒரு ஏழைக்கு எளிதில் தானமாகக் கொடுக்க மாட்டோம்..! ஆனால் உணவுவிடுதிகளில்(ஹோட்டல் ) வேலை செய்யும் ஆளுக்கு சந்தோசமாக (டிப்ஸ் ) ஆக 5 ஈரோ கொடுப்பார்களே ? 
மூன்று நிமிடம் எமக்கு கடவுளை வணங்க பிடிக்காது! ஆனால் மூன்று மணித்தியாலம் சினிமாப் படம் அல்லது நாடகம் பார்க்கப் பிடிக்கும்! 
நாங்கள் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால்முடியாது என்பார்கள்! காதலர் தினத்திற்காக ஒரு வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள்! ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது! மீண்டும் வருகின்றேன் 

அன்புடன் தமிழ் கிறுக்கன் 
        (இத்தாலி 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top