புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியை சுனாமி தாக்கியுள்ளது.
சென்டாய் பகுதியை மையமாகக் கொண்டு 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜப்பானின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


மியாகி அருகே கடற்கரையோரம் ஒரு மீட்டர் தூரத்துக்கு கடல் அலைகள் எழும் என்றும், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஹவாய் தீவுப் பகுதிக்கு சுனாமி அபாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்டாய் பகுதியில் கடந்த ஓராண்டில் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top