
இந்தச் சம்பவம் நேற்று இரவு 9.30மணியளவில் பாசையூர் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
அப்பகுதி யிலுள்ள தேவாலயமொன்றில், புதுவருட கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை, அங்கு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் மூண்டுள்ளது.
இதனையடுத்து இரு குழுக்களும் பரஸ்பரம் மோதிக்கொண்டுள்ளன. இதில் கலிஸ் தயாளன் வயது (23) என்ற இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் நேற்றிரவே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரியவருகின்றது.