புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் உள்ள செஷிர் என்ற இடத்தை சேர்ந்த பெண் சிம்சன். இவருக்கு மில்லி சிம்சன் என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை எலும்பு முறிவு என்ற ஒருவித வினோத
நோயினால் அவதிப்பட்டு வருகிறாள்.

அவள் உடலை லேசாக தொட்டாலே எலும்பு முறிந்து விடுகிறது. கை, கால்கள் மற்றும் தாடை எலும்புகள் பல தடவை முறிந்துள்ளது.

எலும்புகள் வலுவற்ற நிலையில் இருக்கும் அவளால் தனது சொந்த கால்களால் நிற்க முடியவில்லை.

இருந்தும் அவள் இன்னும் தொடர்ந்து உயிர் வாழ்கிறாள். அவள் தாயின் வயற்றில் கர்ப்பபையில் வளரும்போதே 30 எலும்புகள் உடைந்து இருந்தன. இது ஸ்கேன் செய்து பார்த்தபோது தெரிய வந்தது.

எனவே, கருவை கலைத்து விடலாம் என டாக்டர்கள் சிபாரிசு செய்தனர். ஆனால் அதை ஏற்க சிம்சன் மறுத்துவிட்டார். தனது குழந்தையை பெற்றெடுத்து முடிந்தவரை வளர்ப்பேன் என கூறிவிட்டார்.


அதன்படி தற்போது அக்குழந்தையை வளர்த்து வருகிறார். குழந்தை மில்லி சிம்சனுக்கு கால்சியம் சத்துக்கள் அடங்கிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கடுமையான நோயில் அவதிப்பட்டாலும் மன தைரியத்துடன் தனது மகள் உயிர் வாழ்வதாக தாயார் சிம்சன் பெருமைப்பட்டு கொள்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top