புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் விநியோகிக்கப்படும் பதிவு முத்திரைகளுக்கு சமனான போலி முத்திரைகளை ஒட்டி சில பெண்களை வெளிநாட்டு
வேலைவாய்ப்புக்காக அனுப்புவதற்கு முயற்சித்த முகவர் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - மருதானை பிரதேசத்தில் உள்ள முகவர் நிலையம் ஒன்றின் உப முகவர் ஒருவரினாலேயே இந்த முறைகேடான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் போது பயண அனுமதி சீட்டுகளை சட்ட ரீதியாக்குவதற்காக இந்த முத்திரைகள் பயன்படுத்தப்படுவதாக வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த முகவரால் தயாரிக்கப்பட்ட முத்திரைகள் இடப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இரண்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போலி முகவர் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
Top