புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மீஞ்சூர் அருகே லாரி டிரைவர் கொலை வழக்கில் கிளீனர் சிறுவன் கைது செய்யப்பட்டான். தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கொன்றதாக போலீசாரிடம்வாக்குமூலம் அளித்து உள்ளான்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). சென்னையில் தனியார் நிறுவனத்தில் கண்டெய்னர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் அருகே வல்லூரில் உள்ள கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றி வந்தார். இரவில் பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கினார்.

மறுநாள் காலையில் கிருஷ்ணமூர்த்தி, உடலில் காயங்களுடன் அருகில் இருந்த வடிநீர் கால்வாயில் பிணமாக கிடந்தார். யாராவது அவரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்கள், கிளீனர்கள் 4 பேர் மற்றும் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய ஒரு சிறுவன் ஆகிய 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில் அந்த சிறுவன், மதியழகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும், லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை இவன் தான் அடித்து கொலை செய்தான் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியானது. இதையடுத்து மதியழகனை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

கிருஷ்ணமூர்த்தியின் மனைவியும், எனது தாயும் அக்கா-தங்கை. நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது ஒரு நாள் மதியம் வீட்டுக்கு திரும்பி வந்தேன். அப்போது எனது தாயும், சித்தப்பா கிருஷ்ணமூர்த்தியும் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு இருப்பதை நேரில் பார்த்தேன்.

இதனால் நான் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் பாதியிலேயே நின்று விட்டேன். எனவே என்னை தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்தனர். இதையடுத்து எனது சித்தப்பா, அவர் வேலை பார்க்கும் தனியார் டிரான்ஸ்போர்ட்டில் என்னை கிளீனர் வேலைக்கு கடந்த தீபாவளிக்கு பிறகுதான் சேர்த்து விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நானும், எனது சித்தப்பாவும் லாரியில் சென்னையில் இருந்து மீஞ்சூர் அருகே ஒரு கம்பெனிக்கு லாரியில் கண்டெய்னர் பெட்டி ஏற்றி வந்தோம். அப்போது அவர், இந்த வேலையை முடித்து விட்டு நாம் இருவரும் பொங்கலுக்கு ஊருக்கு செல்வோம் என்றார். பின்னர் இரவில் 2 பேரும் லாரியில் தூங்கினோம்.

ஊருக்கு சென்றால் மீண்டும் என் தாயுடன் கிருஷ்ணமூர்த்தி கள்ளத்தொடர்பில் ஈடுபடுவார் என்பதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு லாரியில் இருந்த பெரிய ஸ்பேனரை எடுத்து கிருஷ்ணமூர்த்தியின் தலையில் ஓங்கி பலமுறை அடித்தேன். இதில் சம்பவ இடத்திலேயே அவர், ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

பின்னர் அவரது உடலை லாரியில் இருந்து கீழே இறக்கி அருகில் இருந்த கால்வாயில் வீசினேன். லாரியில் இருந்த ரத்தத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டேன். மீண்டும் சென்னை செல்ல முடியாத நிலையில் சுற்றித்திருந்த போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு வாக்குமூலத்தில் மதியழகன் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலை செய்தது எப்படி? என்று போலீசாரிடம், கைதான மதியழகன் செய்து காட்டினான். அதை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இது பற்றி போலீஸ் துணை கண்காணிப்பாளர் பாரதி நேரடி பார்வையில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

கைதான மதியழகனை சிறுவர் சீர்திருந்த இல்லத்தில் சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top