புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தற்கொலை செய்து கொண்டதாக தீர்மானிக்கப்பட்டு தெல்தெனிய பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட தமிழ் தாதி ஒருவரின் சடலம் தெல்தெனிய நீதவானின் உத்தரவின் பேரில் மீண்டும் எதிர்வரும் 28 ம் திகதி தோண்டி
எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றி வந்த 31 வயதுடைய மலர் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் தெல்தெனியவிலுள்ள தம் கணவரின் வீட்டில் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இவரது திடீர் மரண விசாரணையில் சாட்சியங்கள் வைத்திய அறிக்கை என்பவற்றின் அடிப்படையில் தற்கொலை மரணம் என தீர்மானிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இறந்தவரின் சகோதரர் ஒருவர் இம் மரணத்தில் தமக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்தே நீதவான் எதிர்வரும் 28 ம் திகதி மீண்டும் தோண்டி எடுத்து மீள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

தற்போது இச் சடலம் அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top