புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருகோணமலையின் மிகவும் பின் தங்கிய கிராமமொன்றிலிருந்து பணிப்பெண்ணாக வெளிநாடு சென்று பல்வேறு துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குள்ளான 20 வயது யுவதி
உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையின் உளநலப் பிரிவில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட இந்த யுவதி, சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்த நேரத்தில் பல்வேறு விதமான நெருக்குதல்களுக்கும் தாக்குதல்களுக்கும் தான் அவ்வீட்டு எஜமானியினால் உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தனது தலை முடி வெட்டப்பட்டதாகவும் தனது உடலின் பல பாகங்களில் தீயினால் சுடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கைகளில் இது தொடர்பான தழும்புகளை காண்பித்த இவ் யுவதி தற்சமயம் திடீரென சித்தசுவாதீனமற்ற நிலையை அடைந்ததாகவும் அதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலையின் உளநலப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இங்குள்ள துணைமுகவர் ஒருவரின் உதவியுடன் அனுப்பப்பட்ட இந்த யுவதி அம் முகவர்களினாலும் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு மேல் சவூதியில் பணியாற்றிய இப் பணிப்பெண்ணிற்கான எந்தவிதமான கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top