புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 1996ம் ஆண்டு பஸ் நடத்துனர் ராஜு என்பவர் மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தார்.


பின் அச்சிறுமியை, 40 நாளில், 42 பேர் பலாத்காரம் செய்தனர். அந்த கும்பலில் சிக்கி தவித்த சிறுமி, ஒரு மாதத்திற்கு பிறகு, அக்கும்பலிடம் இருந்து தப்பினாள்.

இரு ஆண்டுகளுக்கு பின், இந்த சம்பவம் வெளியே தெரிந்தது. மாநிலம் முழுதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து, 1999ம் ஆண்டு கேரள அரசு உத்தரவுப்படி, 35 பேரை, பொலிசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய சிலர், தலைமறைவாகி விட்டனர்.

இவ்வழக்கில், 2000ம் ஆண்டு, குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின், கேரள உயர் நீதிமன்றில், மேல் முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த கேரளஉயர் நீதிமன்றம், 2005ம் ஆண்டு ஜனவரி, 20ம் திகதி, தண்டனை விதிக்கப்பட்ட, தர்மராஜன் என்பவரை தவிர, 35 பேரையும், வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட சிறுமி, இதை எதிர்த்து, அதே ஆண்டு, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கு, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நேற்று வழங்கப்பட்ட உத்தரவில், ‘’கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ஆச்சரியமாக உள்ளது. எனவே, அந்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. வழக்கு மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்திலேயே மறு விசாரணை நடத்தி, ஆறு மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.

அனைவரது பிணை உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. வெளியே உள்ள அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’’ கூறப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top