புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


துப்பாக்கி கலாசாரம் பெருகிவிட்ட அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனெக்டிகட்டில் உள்ள நியூடவுனில் பள்ளிக்குள் புகுந்த நபர் 20
குழந்தைகள் உட்பட 26 பேரை சுட்டுக்கொன்றான்.
அதற்கு முன்னதாக ஒக்டோபர் மாதம் ஒரு சமூக வலைதளத்தில் ஒரு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

அதில் டென்னிசே மாகாணத்தில் வாரன் கவுண்டியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 200 குழந்தைகள் கொலை செய்யப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. அந்த பள்ளியில் 2900 குழந்தைகள் படிக்கின்றனர். இந்த கொலை மிரட்டல் விடுத்தவர் யார் என்று பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், இச்செயலில் ஈடுபட்டது ரீசி எல்லியாட் என்ற வாலிபர் என்று தெரிய வந்தது. 24 வயதான இவர் பிரிட்டனில் உள்ள நியூகேஸ்டில் நகரை சேர்ந்தவர். இவரை டென்னிசே பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பீதி ஏற்பட்டது. மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்துவிட்டனர்.

மேலும், அங்கு தங்கி படித்த மாணவர்களும் வெளியேறினர். போதிய பாதுகாப்பு தருவதாக பள்ளி முதல்வர் உறுதி அளித்ததை தொடர்ந்து பள்ளிக்கு குழந்தைகள் அனுப்பப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top