புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மது, கஞ்சா, சிகரெட், பான் பராக் போன்ற தீமைதரும் போதை பழக்கங்களுக்கு ஆளானவர்கள், அந்த போதை உலகத்தில் இருந்து விடுபட முடியாமல் தங்களுக்கு ஆனந்தத்தை தரும் போதைப்
பொருட்கள் கிடைக்காத வேளையில் வெறி பிடித்தவர்கள் போல் நடந்துக் கொள்வதுண்டு.

இந்த வகையில், ரத்தம் குடிப்பதில் போதை சுகம் கண்ட வாலிபர் ஒருவர் தென்மேற்கு துருக்கி நாட்டில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியின் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 23 வயதாகும் அவரது பெயர் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தாயாரிடம் அடி, உதை வாங்கியதாக கூறும் இவர், 11 வயதுக்கு முன்னர் தனக்கு என்ன நேர்ந்தது என்பது நினைவில் இல்லை என்று கூறியுள்ளார். முதன் முதலாக, தனது மார்பு, வயிறு, கை ஆகியவற்றை பிளேடுகளால் கிழித்துக் கொண்டு உடலில் இருந்து வடியும் ரத்தத்தை கோப்பையில் சேமித்து இவர் குடிக்கத் தொடங்கியுள்ளார்.

நாளடைவில் இதுவே அன்றாட வாடிக்கையாகி விட்ட பிறகு ரத்தம் குடிக்காமல் இவரால் இருக்க முடியவில்லை. மூச்சு விடுவது எவ்வளவு அவசியமானதோ..? அதே போல், ரத்தம் குடிப்பதும் எனக்கு அத்தியாவசியமாகி விட்டது என்கிறார், இவர். அதன் பிறகு குடிப்பதற்கு, ரத்தம் கிடைக்காதபோது எதிர்படுபவர்களின் கழுத்தை வெட்டியோ அவர்களை கடித்தோ ரத்தம் குடிக்கும் வெறி இவரிடம் ஏற்பட்டு விட்டது.

இதைப் போன்ற சம்பங்களின் போது போலீசார் இவரை பல முறை கைது செய்துள்ளனர். தனது காதில் யாரோ உத்தரவிடுவதாகவும் அதனால் இப்படி செய்து வருவதாகவும் இவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சுயநினைவிழந்த நிலையில் ரத்தம் குடிப்பதாகவும் கூறும் இவர் தனது வாழ்வில் அடுக்கடுக்காக பயங்கர சம்பவங்களையே சந்தித்துள்ளார்.

இவரது நண்பர் ஒருவர், தனது எதிரியின் தலையையும் ஆணுறுப்பையும் வெட்டிக் கொன்ற காட்சியை இவர் நேரில் பார்த்துள்ளார். தொடர்ந்து, மாமா கொலை செய்யப்பட்டது, தனது 4 மாத குழந்தை மரணமடைந்தது போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் இவரது மனநிலையை மாற்றி விட்டது என உளவியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

மன அழுத்தம், மனச் சிதைவு, மன உளைச்சல், மன பிறழ்ச்சி, தற்காலிக ஞாபக மறதி உள்ளிட்ட பல்வேறு மனநோய்களுக்கு உள்ளாகிப் போன தனது அன்பு மகனின் போதை பழக்கத்திற்காக இவரது தந்தை ரத்த வங்கிகளில் இருந்தும் கூட விலை கொடுத்து ரத்தம் வாங்கி வந்து இவருக்கு தந்துள்ளதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.

6 வார காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இந்த வாலிபர், தற்போது ரத்தம் குடிக்கும் பழக்கத்தை மெல்ல மெல்ல மறந்து வருவதாகவும் ஞாபக மறதி உள்ளிட்ட மன வியாதிகளும் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top