புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சூரியனில் இருந்து பயங்கர புயல் ஒன்று பூமியை தாக்கலாம் என விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர். இதனால் செயற்கைக்கோள்கள், விமானம் மற்றும் மின்சார சேவைகள்
பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனால் உமிழப்படும் துகள்கள் ஒன்று சேர்ந்து இந்த புயல் உருவாகிறது. தொன் கணக்கில் உமிழப்படும் துகள்கள், மணிக்கு 16 லட்சம் கி.மீ., வேகத்துடன் பூமியை நோக்கி வரும். இந்த புயல் தோன்றுவதற்கு 30 நிமிடங்களுக்குமுன் தான், அது உருவானது பற்றி அறிய முடியும். நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் இந்த பெரிய புயல், கடந்த 1859ல் பூமியை தாக்கியுள்ளது. கனடாவில், 1989ல் அளவில் சிறியதான புயல் ஒன்று தாக்கியதில், மின் தொகுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, பெரும் மின் வெட்டு ஏற்பட்டது. இந்த தகவலை லண்டனில் உள்ள, “ராயல் அகடமி ஆப் இன்ஜினியரிங்´ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, இந்த அகடமியின் செயல் தலைவர் பேராசிரியர் பால் கேனன், “இந்த புயல் சவாலானது என்றாலும், பிரளயம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதல்ல. இதை கண்காணிக்க வானிலை மையம் ஒன்றை அமைத்து, பெரும் சேதம் நிகழாமல் தடுக்க முடியும்”, என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top