புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவில் விக்டோரிய மாகாணத்தில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் யாருக்கும் அடங்காதவனாக படுசுட்டியாக இருந்த சிறுவனுக்கு
பொலிசார் மின்சார அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இச்சிறுவன் கடந்த 2001ம் ஆண்டில் குழந்தை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பொறுப்பில் வந்து சேர்ந்துள்ளான். இவன் யாருக்கும் அடங்காமல் படுசுட்டியாக இருந்ததால் 15 முறை வெளியேற்றப்பட்டான்.

இவனை சிறுவர் மையத்தில் உள்ள ஓர் அறையில் அடைத்து வைத்துள்ளனர். இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் குளிர்ந்த நீரில் குளிக்க வைத்துள்ளனர்.

அதற்கு பின்னர் அவன் இன்னும் முரடனாக மாறி விட்டதனால் அவர்கள் பொலிசாரை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி மயக்க மருந்து கொடுத்துள்ளனர். இவனுக்கு நடந்த சிகிச்சை முறையாக அளிக்கப்படவில்லை.

இது குறித்து குழந்தை நல அமைப்பான Turpel-Lafond இவனுடைய பிரச்சனையைத் தீர்க்கப் பின்வரும் நான்கு பரிந்துரைகள் குழந்தை நல அமைச்சகத்துக்கு வழங்கியுள்ளது.

இவனுக்கு முறையாக பயிற்சியும், கவனிப்பும் வழங்கப்பட வேண்டும், மருத்துவர் ஆலோசனையை அவ்வப்போது பெற வேண்டும், சமூக நலப் பணியாளரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும் மற்றும் அவனைத் தனி அறையில் அடைப்பதோ அல்லது கடும் தண்டனை வழங்குவதோ கூடாது என்று தெரிவித்துள்ளது.

இச்சிறுவன் தற்போது அரசின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top