புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தென்கொரியாவில் சுமார் 3500 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள மாபெரும் திருமண நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தலைநகர் சியோலில் இருந்து வட கிழக்கே
அமைந்துள்ள கப்யெயோங் எனும் நகரில் திருமணம் நடந்த அதே நேரத்தில் மூனியெஸ் (Moonies) என அழைக்கப் படும் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டில் வாழும் 24000 பேர் வீடியோ இணைப்பு மூலம் திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமண வைபவத்தில் தேவாலயத்தின் உறுப்பினர்கள் 400 பேரும் அடங்குவர்.

இத்தேவாலயம் மூலமாகப் பல ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கும் சம்பிரதாயம் 1960 ம் ஆண்டுகளிலேயே தொடங்கி விட்டது. 1997ம் ஆண்டு மட்டும் 30 000 ஜோடிகள் வாஷிங்டனில் திருமணம் செய்து வைக்கப் பட்டனர்.

இதேவேளை இந்தத் தேவாலயம் தனது மதத்தைப் பின்பற்றுபவர்களை மூளைச் சலவை செய்வதாகவும், தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டும் உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top