புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தைச் சேர்ந்த டீன்ஏஜ் வாலிபர் ஆஸ்திரேலியாவில் காட்டுப் பகுதியில் மாட்டிக் கொண்டார். சாப்பாடு கூட கிடைக்காமல், தனது சிறுநீரைக் குடித்தும்,

கான்டாக்ட் லென்ஸ் வைக்கும் பாக்கெட்டில் உள்ள தண்ணீரைக் குடித்தும் உயிர் தப்பி மீண்டுள்ளார் அந்த வாலிபர்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவன் சாம் உட்ஹெட். 18வயதான இவன் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் வசித்து வருகிறான். 2 வாரங்களுக்கு முன்பு அங்குள்ள காட்டுப் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணைக்கு வேலைக்குப் போயுள்ளார். அங்கிருந்து 2 வாரங்களுக்கு முன்பு ஜாகிங் போவதற்காக காட்டுக்குள் போயுள்ளார். போனவருக்கு திரும்பும் வழி தெரியவில்லை, வழி மாறிப் போய் விட்டார்.

காட்டுக்குள் வழி தெரியாமல், கொளுத்தும் வெயிலில் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவித்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் தாகத்தைத் தணிக்க தனது சிறுநீரையை குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மேலும், தனது டிரவுசர் மற்றும் சட்டையைக் கழற்றி அவசர உதவி கோரி கொடி போல பிடித்தபடி காட்டுக்குள் சுற்றியுள்ளார்.

அவரை மீட்புப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டரில் வந்தவர்கள் தற்செயலாக மேலிருந்து பார்த்து மீட்டுள்ளனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் மயங்கிய நிலையி்ல அந்தப் வாலிபரை
மீட்டுள்ளனர். சற்று தாமதித்திருந்தாலும் அவர் உயிரிழந்திருப்பான் என்று மீட்புப் படையினர் கூறியுள்ளனர்.

என்ன கொடுமை என்றால், அவரிடமிருந்த கான்டாக்ட் லென்ஸ் பாக்கெட்களும கூட அவனது தாகத்தைத் தணித்துள்ளன. அதாவது அவரிடம் நிறைய கான்டாக்ட் லென்ஸ்களை வைக்கும் பாக்கெட்கள் இருந்தன. அதில் உள்ள தண்ணீரையும் விடாமல் குடித்து உயிரைப் பிடித்து வைத்திருந்தார் அந்தப் வாலிபர். கொஞ்சம் கொஞ்சமாக அந்த தண்ணீரையும் குடித்து வந்துள்ளார். அதேபோல சிறுநீரைக்குடித்தும் உயிர் தப்பியுள்ளார்.

காட்டிற்குள் இதுபோன்று வழிமாறிப் போனால் எப்படி உயிர்பிழைக்கலாம் என்று டிஸ்கவரி சேனலில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புகின்றனர். அதில் உணவுக்காகவும், உடலில் நீர்ச்சத்தினை தக்கவைக்கவும் என்ன செய்யவேண்டும் என்று நேரடியாகவே அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செய்து காட்டுவார். ஒருவேளை அந்த நிகழ்ச்சியை இந்த வாலிபர் பார்த்திருப்பாரோ என்னவோ?.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top