புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிறந்தவுடன் இறந்துவிட்டதாக வைத்தியர்களால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட குழந்தை உயிருடன் இந்த சம்பவம் நேற்றுக்காலை கனடாவில்இடம்பெற்றுள்ளது. ரொறன்ரோவில் 20
வயது நிரம்பிய கர்ப்பிணித் தாய் ஒருவர் அவரது தாயாருடன் ஹம்பர்ரிவர் வைத்தியசாலைக்கு நடந்து சென்றவேளை அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது அந்தக் குழந்தையும் அவரது தாயாரும் ஹம்பர் றிவர் மருத்துவமனையின் வ்வின்ஸ் பிரிவுக்கு அம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டனர்.

வைத்தியசாலையில் அந்தக் குழந்தை உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாததால் அந்தக் குழந்தை இறந்துவிட்டது என மருத்துவர்களால் கூறப்பட்டது. பின்பு சிறிது நேரத்தின் பின்பு குழந்தையை ஒரு துணியினால் மூடிவிட்டனர். பிரேத விசாரணைக்காக இரு பொலிசார் குழந்தை அருகில் காத்திருந்த வேளை குழந்தையைப் போர்த்திய துணியில் அசைவு ஏற்பட்டது. குழந்தை அசைந்தது. துணியை எடுத்துப் பார்த்தபோது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது.

தற்போது அந்தப் பெண்குழந்தையும் தாயாரும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாகத் தெரியவருகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top