புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அடுத்தடுத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 29 பேர் பலியானார்கள்.
வடக்கு பாக்தாத் நகரின் அருகேயுள்ள காதிமியா
என்ற இடத்தில் உள்ள சந்தை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரு கார் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 43 பேர் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில் பாபில் மாகாணத்தில் நடந்த இரு கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 26 பேர் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த தாக்குதலை மனநிலை பாதிக்கப்பட்ட இரு பெண்களின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி ரிமோட் கண்ட்ரோல் முறையில் வெடிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈராக்கில் வாழும் பல்வேறு இனக்குழுக்களுக்கு மத்தியில் சண்டைகள் இருந்துவந்தாலும் சதாம் உசேன் ஆட்சியில் இருந்தவரை இதுபோன்ற குண்டுவெடிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top