புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய முதியவர், 25 மருத்துவமனைகளை அணுகியும் இடம் கிடைக்காததால் பரிதாபமாக இறந்தார்.

தலைநகர் டோக்கியோவில் உள்ள குகி நகரை சேர்ந்த 75 வயது முதியவர், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார்.

ஆதரவற்ற நிலையில் தனியாக வாழ்ந்த அவர், போன் செய்து ஆம்புலன்சை வரவழைத்தார்.

ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட அவர், டோக்கியோவில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையாக அணுகி தனக்கு சிகிச்சை அளிக்கும் படி வேண்டினார். ஆனால் 25 மருத்துவமனைகளும் போதுமான படுக்கைகள் இல்லையென கூறி இவருக்கு சிகிச்சை செய்ய மறுத்து விட்டன.

மேலும் சில மருத்துவமனைகளை அணுகிய போதும், அந்த மருத்துவமனைகள் பழைய பல்லவியை தான் பாடின. இப்படி 36 முறை அவர், பல மருத்துவமனைகளை அணுகி இடம் கிடைக்கவில்லை.

இவரது நிலை மோசமாகவே ஆம்புலன்சில் இருந்த உதவியாளர்கள் டோக்கியோவின் புறநகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அந்த முதியவர் ஆம்புலன்சிலேயே இறந்தார்.

ஜப்பான் தலைநகரில் அதிநவீன மருத்துவமனைகள் இருந்தும் அவசரத்துக்கு உதவாத காரணத்தால் இந்த முதியவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top