புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவில் 51,000 புதிய வேலைவாய்ப்புகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கனடாவில் பல தொழில் நிறுவனங்கள் தமது தொழில்களைக் குறுக்கி சில நிறுவனங்கள் முற்றாகவே மூடப்பட்டு பல மக்கள் தொழில் இழந்தநிலையில் தற்பொழுது கனடாவில் 51,000 புதிய வேலைவாய்ப்புகள் பெப்ரவரி மாதத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்று புள்ளி விவரம் தகவல் கிடைத்துள்ளது.

புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி மக்களின் வேலையில்லாதோர் வீதமானது மாற்றம் இல்லாமல் 7 சதவீதமாக முன்னர் இருந்ததுபோலவே இருக்கின்றது என்றும் புதிதாக உருவாகிய தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கையானது புதிதாக வேலை தேடுவோரின் எண்ணிக்கைக்குச் சமமாகவிருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த வேலைவாய்ப்புகள் பரந்து பட்டரீதியிலும், சில வேலைகள் பகுதி நேரமானவையாகவும், சிலவை முழுநேர வேலைவாய்ப்பாகவும் இருக்கலாம் என்றும் அதிகரிக்கப்பட்ட வேலை வாய்ப்புக்களில் அரைவாசிக்கும் மேலானவை தனியார்துறையைச் சேர்ந்தவை எனவும் புள்ளிவிபரங்கள் கூறப்படுகின்றது.

மேலும் பிரிட்டிஸ்கொலம்பியா போன்ற மாகாணங்களிலேயே அதிகமான வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top