
திருமணம் செய்ய விரும்பிய, லவ்கேஷ், திருமண தகவல் மையத்தில், தன் பெயரை பதிவு செய்து வைத்தார். அதில், மணமாகாதவர் என, குறிப்பிட்டிருந்தார்.
திருமண தகவல் மையத்தில், லவ்கேஷின் விவரங்களைப் பார்த்த, பள்ளி ஆசிரியை ஒருவர், அவருடன் தொலைபேசியில் பேசினார். இந்த நட்பு நாளடைவில், காதலாக மாறியது. ஆசிரியையும், லக்கேஷும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது, இரண்டாம் திருமணம் செய்தால், சட்ட சிக்கல் ஏற்படும் என, பயந்த லவ்கேஷ், தன் மனைவி ஜெயந்தியை, கொல்ல திட்டமிட்டார். தன் உறவினர் தர்மேந்திராவிடம், இதுபற்றி கூறினார். அவரது ஏற்பாட்டில், கூலிப்படையினர் சிலர், ஜெயந்தியை தாக்கினர்.
இந்தத் தாக்குதலில், ஜெயந்தியின் உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை; மாறாக பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில், அவர் சிகிச்சை பெற்ற போதும், அவரை கொல்ல நினைத்த, லவ்கேஷ், முதல்கட்டமாக, ஜெயந்திக்கு செலுத்தும் குளுக்கோஸ் பாட்டிலில், அவருக்கு தெரியாமல் தண்ணீர் ஊற்றினார்; அதிலும், ஜெயந்தி தப்பினார்.இதனால், எரிச்சல் அடைந்த லவ்கேஷ், மறுநாள், ஜெயந்திக்கு குளுக்கோஸ் செலுத்தும் போது, அதில், விஷ ஊசியை செலுத்தினார். இதில், ஜெயந்தி உடல் முழுவதும் விஷம் பரவி இறந்தார். ஜெயந்தியின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த போது, அவரது உடலில் விஷம் பாய்ந்து செத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையின், லவ்கேஷ் சிக்கினார். போலீசார் முறைப்படி, விசாரித்த போது, பள்ளி ஆசிரியையை, இரண்டாவதாக திருமணம் செய்ய, ஜெயந்தியை கொன்றதை ஒப்புக் கொண்டார். உடன் அவரும், அவரது உறவினர் தர்மேந்திராவும் கைது செய்யப்பட்டனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக