புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மேற்கு போலந்து நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுமியை அந்த சிறுமி வளர்த்து வந்த நாய், உறைபனியில் சிக்காமல் காத்து மீட்டது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு போலந்து பகுதியில் உள்ள பியர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜுலியா, கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டாள்.

-5 டிகிரி உறைநிலை குளிரில் காணாமல் போன மகளை ஜுலியாவின் தாயாருடன் சேர்ந்து சுமார் 200 பேர் தேடியும் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

உள்ளூர் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களையும் தீவிரமாக தேடினர். அப்போது மறு நாள் காலையில், ஒதுக்குப்புறமான சதுப்பு நிலப் பகுதியில் ஒரு சிறுமியின் முனகல் ஒலி கேட்டது.

ஒலி வந்த திசைக்கு விரைந்துச் சென்ற மீட்புப் படையினர் ஆச்சரியத்தில் உறைந்துப் போய் நின்றனர். குளிரில் உடல் விறைத்த நிலையில் இருந்த ஜுலியாவிற்கு கதகதப்பூட்டும் வகையில் தனது உடலால் அவளை போர்த்தியபடி அவளது வளர்ப்பு நாய் அனணத்தபடி படுத்திருந்தது.

இரவு முழுவதும் அந்த வளர்ப்பு பிராணி தந்த அரவணைப்பில்தான் ஜுலியாவின் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருந்தது என்பதை உணர்ந்த மீட்புப் படையினர் மெய் சிலிர்த்துப்போயினர்.

உடனடியாக ஜுலியாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்த அவர்கள், இச்சம்பவத்தை ஊடகவியவலாளர்களுக்கு தெரிவித்ததையடுத்து, ஜுலியா மற்றும் அவளது வளர்ப்பு நாயின் மீது தங்கு தடையற்ற ஊடக வெளிச்சம் பாய்ந்தபடி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top