புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைப்பெற்ற மது ருசிகருக்கான(Wine Taster) போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பவேலோ பாசோ(Paolo Basso) முதல் பரிசு பெற்றுள்ளார்.
இப்போட்டியில் 54 நாடுகளைச் சேர்ந்த மது
ருசிகர்கள் கலந்துகொண்டனர்.

மது ருசிகருக்கு, மதுவை ருசி பார்க்கத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது வாடிக்கையாளரிடம் நன்றாகப் புரியும் மொழியில் பேசிப் பரிமாறத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்று நடுவர்களின் தலைவர் செர்கே டூப்ஸ்(Serge Dubs) இப்போட்டியின் தொடக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் இப்போட்டியை குறித்து முன்னாள் வெற்றியாளர் பேசெட்(Basset) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மதுவை உணவுடன் சுவையும், மணமும் மாறாமல் பரிமாறும்பொழுது வாடிக்கையாளர் அந்தக் கலவையை ஏன் விரும்புகிறார் என்பதை மது ருசிகருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி பெற்ற பாசோ இப்போட்டிக்கு தயாராகத் தனக்கு நேரம் ஒதுக்கித் தந்த தனது குடும்பத்தினருக்கு நன்றிகளைக் காணிக்கையாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மதுருசி போட்டி: கனடா பெண் இரண்டாமிடம்


பெண்களில் பலர் மதுபானக் கூட்டங்களில் மது ருசிகராகப்(Wine Taster) பணியாற்றினாலும் இதற்கான போட்டிகளில் உயர்நிலையை அடைந்ததில்லை.
தற்பொழுது முதன்முறையாக கியுபெக் மாநிலத்தைச் சேர்ந்த வெரோனிக் ரிவெஸ்ட்(Veronique Rivest) என்ற பெண் சர்வதேச அளவில் நடைப்பெற்ற மது ருசி போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

சர்சதேச மதுருசிக் கழகம் இந்தப் போட்டியை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வருகின்றது. இதில் ஒரு பெண் இறுதிப்போட்டி வரை சென்றதாக வரலாறு இல்லை.

ஆனால் இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற இப்போட்டியில், எழுத்துத் தேர்வு, கண்மூடி ருசித்தல் மற்றும் மதுவைப் பரிமாறுவதில் சந்திக்கும் சவால்கள் போன்ற போட்டிகளில் ரிவெஸ்ட் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தேர்வாகினார்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பவோலோ பாசோ(Paolo Basso) என்பவர் அறுபது போட்டியாளர்களுடன் மோதி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மூன்றாவது முறை சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற ரிவெஸ்ட் இதுவரை முதல் பன்னிரெண்டு இடத்திற்குள் வந்திருந்தார். தற்பொழுது இரண்டாம் இடத்தையே பிடித்துவிட்டார்.

தனது பதினாறு வயதில் மதுபானக்கூடத்தில் பணிக்குச் சேர்ந்த ரிவெஸ்ட் மதுவை ருசி பார்த்துக் சொல்வதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top