புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா இயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி கி.பி.27-33 இல் சிலுவையில்
அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

இது கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணையில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டின் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது.

இந்நாள் புனித வெள்ளிக்கிழமையில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் (Resurrection of Jesus) என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனாவில் வாழ்ந்து, கடவுளாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு கல்லறையினின்று மீண்டும் மாட்சிமையான உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்னும் கிறித்தவ நம்பிக்கை ஆகும். இதை இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் பதிவு செய்துள்ளன[1].

இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் விண்ணேற்றமடைந்த நிகழ்ச்சியிலிருந்து (Ascension of Jesus) வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறித்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என கிறித்தவர்கள் நம்புகின்றனர். இது அவர்கள்தம் நம்பிக்கையின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.

இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட பிறகும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் உறுதியான நம்பிக்கை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலத்தீன நாட்டில் வாழ்ந்து இறந்த இயேசு இன்றும் ஒரு புதிய முறையில் கடவுளோடு இணைந்து உயிர் வாழ்கின்றார் என்பது அவர்கள் கோட்பாடு.

திருச்சபையில் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெறுவோர் உயிர்த்தெழுந்த இயேசுவின் புதிய வாழ்வில் பங்குபெற்று, புது மனிதராய் மாறுகிறார்கள் எனவும், இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட அவர்கள் நன்னடத்தையிலும் நன்னெறியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் புனித பவுல் அறிவுறுத்துகிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top