புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்8,9,10பூஜைப்பொருள் வியாபாரிகள்,மனநலக் காப்பகங்களை நடத்துவோர்கள்,தாய் சேய் நல விடுதிகளை சார்ந்தவர்கள்,உப்பு உர வியாபாரிகள்,மருந்து
சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,நீர்வளத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவீர்கள். மஹான்களின் எதிஜர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள்.
ஏப்ரல்11,12,13நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.புதிய தொழில்கள் ஆரம்பம் செய்யலாம்.வேற்று மதத்தவரால் எதிர் பாராத ஆதாயங்களை அடைவீர்கள்.புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதை தவிர்க்கவும். எழுத்துத் துறை,அச்சுத் தொழில்கள்,புத்தகம் நோட்டு வியாபாரிகள்,
வக்கீல்கள் எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள்,தபால் தந்தி துறையைச் சார்ந்தவர்கள்,ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.ஏப்ரல்14உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் மாறிப் பொருட் செலவுகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.நாட் பட்ட வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும்.சகோதரர்களால் மன நிம்மதி குறைந்தாலும் அவர்களால் சிற் சில ஆதாயங்களை அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வரவும்.


2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்8,9,10பூ பழம்,பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அற
நிலையத் துறை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,நறுமணப் பொருள்கள் மற்றும் கம்யுட்டர்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் மிகவும் நல்ல பலன்களை அடைவார்கள். உடம்பில் மூளை நரம்பு ஆகிய உபாதைகள் வந்து போகும்.காதல் விசயத்தில் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வதுநல்லதாகும்.ஏப்ரல்11,12,13
கண்களில்கவனமுடன் இருக்கவும்.பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும்.நீண்ட காலமாக புதிய வீடு நிலம் வாங்கப் போட்டிருந்த திட்டங்கள் நிறவேற வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி உண்டாகும்.தீராத நோய்களுக்கு புதிய முறை மருத்துவத்தின் மூலமாக நல்ல குணம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் உதவியால் திருமணம் நடக்கும்.ஏப்ரல்14மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்க வேண்டாம்.செய் தொழிலில் மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது.உற்றார் உறவினர் வருகையால் பணச் செலவுகள் உண்டாகும்.அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து மஞ்சள் வஸ்திரம் தானம் செய்து வரவும்;.


3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்8,9பிள்ளைகளால் மன மகிழ்ச்சியும்,பொருள் வரத்தும் உண்டாகும். பொது பணித்துறை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்து வோர்கள்,ஆலயப் பணி புரிபவர்கள்,விஞ்ஞானத் துறை சார்ந்தவர்கள், கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,மீன் முட்டை மாமிசம் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,ஏசன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள்,அணுஆராய்ச்சி நிலைய பணியாளர்கள்,விமானப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு நற்பலன் தரும் காலமாகும்.ஏப்ரல்10,11புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்பூர்வீகச் சொத்து விசயங்களில் இருந்து வந்துள்ள நாட்பட்ட பிரச்சனைகள் நீங்கிச் சொத்துக்கள் கிடைக்கும்.தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ள எடுத்து கொண்ட முயற்சிகளில் வெற்றி அடையலாம்..
ஏப்ரல்12,13,14பொதுப் பணிகளைச் செய்வோர்கள் கவனமுடன் பணி ஆற்றுவதால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கலாம். பொருளாதாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகுவதோடு மன நிம்மதி குறைவதோடு வீண் பொருட் செலவுகளும் வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ் சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வரவும்.


4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்8,9வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகளால் சில ஆதாயங்களை அடைவார்கள்.ஏப்ரல்10,11குடும்ப சொத்துக்கள் சம்பந்தமாகிய விசயத்தில் சச்சரவுகள் வந்து போகும். விருந்தினர்களின் வரவால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். செய்தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தள்ளிப் போடவும்.குழந்தைகளின் உல்லாசப் பயணங்களுக்காக பயணங்களை மேற் கொள்வதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகும். நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்ப கை வந்து சேரும் காலமாகும்.ஏப்ரல்12,13,14பழைய பொருட்கள்,கமிசன் மற்றும் ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள்,பழைய இரும்பு.தகரம் போன்றவற்றை விற்பனை செய்வோர்கள்,மீன் முட்டை மாமிச உணவுகள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.அரசியல் வாதிகளிடம் இருந்து நீண்ட நாட்களாக எதிர் பார்த்து வந்த உதவிகள் கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் சென்று வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். அரசு வழக்கு போன்ற வியங்களில் எதிர் பார்த்திருந்த ஜாதகமான முடிவுகள் வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
புரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து கருப்பு வஸ்திரம் தானம் செய்து வரவும்.


5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்8,9காதல் விசயங்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து உறவுகள் வலுப் பெறும்.கூட்டுத் தொழில்களைச் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும்.அரசியல் வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த ஆதரவுகள் கிடைக்கும். மற்றவர்களுக்காக உழைப்பதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற விசயத்தில் சற்று கவனமாக நடந்து கொள்ளவும். அரசு வழக்கு விசயத்தில் சாதகமான தீரப்புகள் வந்து சேரும் காலமாகும்.ஏப்ரல்10,11நீண்ட தூரப் பயணங்களை தள்ளிப் போடுதல் நல்லதாகும்..தீராத நோய்களுக்கு விடை காணுவீர்கள்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.யாத்திரையில் மிகவும் எச்சரிக்கையுடன் பயணம் செய்து வருவதன் மூலமாக விபத்துக்களைத் தவிர்க்கலாம். தங்கம் வெள்ளி நகை வியாபாரிகள் எதிர்பாராத லாபம் அடைவார்கள். ஏப்ரல்12,13,14வெகு காலமாகப் பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும்.வீடு நிலம் போன்றவற்றின் மூலமான புதிய கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி அடையலாம். விவசாயம் சுமாராகக் காணப்படும்.மாணவர்களுக்கு கல்வித்துறையில் பரிசு மற்றும் பாராட்டுக்களை பெற வாய்ப்புகள் உள்ளன.தேவையான பொருளாதாரம் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
புரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வரவும்.


6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்;.ஏப்ரல்8,9கண் காதுகளில் கவனம் தேவை.புதிய வீடு மற்றும் நில புலன்களை வாங்குவதன் மூலமாக புதிய கடன்களை வாங்குவீர்கள்.தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம்.அரசுவழக்கு விசயங்களில் எதிர்பார்த்து இருந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு மன நிம்மதி அடைவீர்கள். ஏப்ரல்10,11,12மஹான்களின் தரிசனத்திற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும்.. காதல் விசயங்களில் அநுகூலமான சில செய்திகள் வந்து சேரும்.இரும்பு இயந்திரம், இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பழைய இரும்புப் பொருள் வியாபாரிகள்,எண்ணை,பல சரக்கு போன்ற வியாபாரிகள்,அடிமைத் தொழிற் செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர்கள்,உர வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.ஏப்ரல்13,14 பெண்களால் துலை தூரத்தில் இருந்து நற்செய்திகளும் பொருள் வரத்தும் உண்டாகும்.புதிய நண்பர்களின் சேர்க்கையை தவிரக்;கவும்.குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்துவர வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும்.ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்ட சம்பந்தமான விசயங்களில் மிகவும் கவனமுடன் இருக்குவும்.வங்கிகளில் ஈருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த கடன் உதவி தொகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனீஸ்வர வழிபாடு செய்து நீல வஸ்திரம் தானம் செய்து வரவும்.


7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்8,9,10,11விவசாயம் செய்வோர்களுக்கு விவசாயம் நன்றாகப் பலிதமாகும்.ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறை சார்ந்தவர்கள்,அரசியல் வாதிகள்��கார் லாரி போன்ற வாகன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,வாகன ஓட்டுனர்கள்,அழகுகலைக் கூடங்களை நடத்துபவர்கள்,நவ ரத்தின வியாபாரிகள்,திருமணத் தகவல் மையங்கள் மற்றும் திருமணக் கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் மிக லாபம் அடைவார்கள். ஏப்ரல்12 மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளுக்காகப் பணம் பொருள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரி
களால் கண்டிப்பும், இட மாற்றமும் ஏற்படலாம். திருட்டுப் போன பொருட்கள் திரும்பி வீடு வந்து சேரும்.ஏப்ரல்13,14புதிய வீடு தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்யப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்று தள்ளி போடுதல் நல்லதாகும் விளையாட்டு துறை சார்ந்தவர்கள் நல்ல மதிப்பெண்களையும் பரிசும்,பாராட்டுதல்களை பெறுவார்கள்.மனைவி மற்றும் மனைவி வழிச் சொந்த பந்தங்கள் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள்..பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வரவும்.


8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்8,9நெருப்பு மின்சாரம்,இராணுவத் துறை சார்ந்தவர்கள், அக்கினி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் காவல் துறை பணி ஆற்றுவோர்கள்,பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.தாயின் உடல் நிலையில் இருந்து நோய்கள் குறையக் கூடிய காலமாகும்.ஏப்ரல்10,11,12 விருந்தினர்களின் வரவால் சிறிய மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். ரேஸ் லாட்டரி மூலம் பணம் பொருள் கிடைக்கலாம்.உடம்பில் சீதளம் மற்றும் அலர்ஜி போன்ற தொல்லைகள் வந்து போகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்ட திட்டங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து புதிய தொழில்களை ஆரம்பம் செய்வீர்கள்.சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படக் கூடிய காலமாகும்..உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற தொல்லைகள் வந்து போகும். புதிய சொத்துக்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள்.ஏப்ரல்13,14கலைத் துறையினர்கள் பரிசும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். தந்தை மகன் உறவுகளில் சிறிய பிரச்சனைகள் வந்து போகும்.வீடு நிலம் போன்றவற்றினை பிரிந்து போன உறவுகளுடன் திரும்பவும் ஒன்று சேருவதற்கான காலமாகும்..புதுப்பித்துக் கட்டுவதற்காக போட்ட திட்ங்களில் வெற்றி அடைய வாய்ப்புகள் உள்ளது.விபரீதமான எண்ணங்களையும்,தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையையும் தவிர்த்தல் நல்லது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து சிகப்;பு ஆடை தானம் செய்து வரவும்.


9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். ஏப்ரல்8,9நெருப்பு,மின்சாரங்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.பிள்ளைகளால் சில பொருட் செலவுகளும், வீண் பிரச்சனைகளும் வந்து போகும். குல தெய்வ வழிபாடு செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும். சகோதரர்களால் திடீர் தன வரவுகள் உண்டாகும்..சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுநலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் மற்றும் புகழ் அடைவதன் மூலம் மன நிறைவடைவீர்கள்.ஏப்ரல்10,11,12வங்கிகள் மூலம் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் வந்து சேரச் சற்று கால தாமதம் ஆகலாம்.தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இற்குமதி செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர் விற்போர்கள்,அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,வட்டித் தொழில,தரகு ஏஜன்சி கமிசன் போன்ற தொழிற் செய்வோர்கள்,பழைய இரும்பு,பழைய பேப்பர்,பிளா~;டிக் போன்ற பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.ஏப்ரல்13,14 சமுதாய நல்லிணக்கத்திற்காக உழைப்பதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.அரசு சம்பந்தமான வழக்கு விசயத்தில் மிகவும் கவனம் தேவை. செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வந்து போக வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
புரிகாரம்:-பிதுர்��அம்மன் வழிபாடு செய்து கருப்பு வஸ்திரம் தானம் செய்து வரவும்.


10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்8,9உடம்பில் கண் மற்றும் காதுகளில் கவனம் தேவை.தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவது நல்லதாகும். புதிய நண்பர்களின் சேர்க்கை மூலம் காரணமற்ற பிரச்சனைகள் வந்து சேரக் கூடிய காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லதாகும்.ஏப்ரல்10,11,12 தந்தையின் உடல் நிலையின் பாதிப்பால் வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும். காதல் சம்பந்தமான விசயங்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களின் உதவிகளால் நல்ல தகவல்கள் வந்த சேரும் காலமாகும்..நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ள முயற்சிப்பீர்கள். குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில தடைகள் வரக்கூடும்.அண்டை அயல் வீட்டுக் காரர்களுடன் கவனமாகப் பழகி வருதல் நல்லது.ஏப்ரல்13,14பொருளாதார நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் மிக நன்றாக இருக்கும். திருட்டுப் போன பொருட்கள் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்துவோர்கள்,அரசியல் வாதிகள்,மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைகளை செய்வோர்கள்,வெளி நாட்டுத் தூதுவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவீர்கள். அரசியல் வாதிகளால் எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
புரிகாரம்:-மஹாவி~;ணு வழிபாடு செய்து பச்சை வஸ்திரம் தானம் செய்யவும்.


11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்8,9கடல் வளத்துறை சார்ந்தவர்கள்,உப்பு மற்றும் கடல் வாழ் பொருட்களின் விற்பனையாளர்கள்,தண்ணீர்,
கூல்டிரிங்ஸ் போன்ற திரவ பொருட்களின் வியாபாரிகள்,பூஜைப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள்,ரத்தின வியாபாரிகள்,மருத்துவத் துறை சார்ந்தவர்கள்,மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் இவற்றில் பணி புரியும் பேராசிரியர்கள் ஆகியோர் மிகவும் நற்பலன்களை அடைவார்கள்.ஏப்ரல்10,11கணவன் மனைவி உறவுகளில் சிற் சில பிரச்சனைகள் வந்து போகும்..கூட்டுத் தொழிலில் பங்காளிகளுடன் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து தீரும்..மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும்�� பாராட்டுதல்களை பெறுவார்கள்.சொத்து சம்பந்தமான விசயங்களில் இருந்து வந்துள்ள பிரச்சனகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் சாதகமான நல்ல முடீவுகள் கிடைக்கும்.ஏப்ரல்12,13,14குழந்தைகளால் பொருட்செலவுகள் வந்த போதிலும் அவர்களால் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.உடம்பில் வயிறு��முதுகு போன்ற உபாதைகள் வந்து போகும்.அரசியல் வாதிகள் மூலம் எதிர் பாராத ஆதாயங்களை அடைய வாய்ப்புகள் உள்ளது.வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதால் பொருட் செலவுகள் ஏற்படும்.விபரீத எண்ணங்களை நினைத்து மன நிம்மதி இழக்காதிருங்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன்களைத் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வரவும்.;.


12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்8,9உடல் நிலையில் மூலம் மற்றும் நீர் சம்பந்தம் ஆகிய உபாதைகள் வந்து போகும். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில நன்மைகளை அடையலாம். உத்தியோகத் துறையினர்களுக்கு நினைத்த இடங்களுக்குப் பணி .இட மாற்றம் ஏற்படும்.புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.ஏப்ரல்10,11,12வேற்று மதத்தவுர்களால் எதிர் பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஏற்படலாம்.பிரிந்து போன கணவன் மனைவி உறவுகள் மீண்டும் தொடருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.சகோதர சகோதரிகளின் சுப காரிய நிகழச்சிகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற்று அவர்களுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். பொதுத் தொண்டுகளைச் செய்வோர்களுக்கு நல்ல பெயர் புகழ் ஏற்படும் காலமாகும்.பழுது பட்ட ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.ஏப்ரல்13,14சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணமும் வீண் பொருட் செலவுகளும் உண்டாகும். வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும்.பூர்வீகச் சொத்து போன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பகள் கிடைக்கச் சற்று காலதாமதம் ஆகலாம்.வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர் பாராத ஆதாயங்கள் வந்து சேரும்.நீண்ட காலமாக எதிர் பார்த்திருந்த வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரக் கூடிய காலமாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சிவ ஆலய வழிபாடு செய்து காவி வஸ்திரம் தானம் செய்து வரவும்.
 
Top