புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவில் ஒண்ட்டேரியோவிலுள்ள மருந்து நிறுவனம் ஒன்று புற்றுநோய் மருந்துகளில் அளவுக்கதிகமான உப்புநீரைக் கலந்து தயாரித்துள்ளது.

இதில் ஏற்கெனவே 117 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் 28 பேருக்கு இம்மருந்து கொடுத்திருப்பதை கோப்புகள் மூலம் மருத்துவ நிர்வாகத்தினர் அறிந்து கொண்டனர்.

இது வரை கண்டறிந்ததில் ஒண்ட்டேரியோவிலும், நியுபிரன்ஸ்விக்கிலும் 40 குழந்தைகள் உட்பட 691 பேருக்கு இந்த உப்புநீர் கலந்த புற்றுநோய் மருந்து கொடுத்திருப்பதாகக் கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து கடந்த வாரம் ஒண்ட்டேரியோவின் புற்றுநோய் மையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஒண்டேரியாவில் உள்ள நான்கு மருத்துவமனைகளும், நியு பிரன்ஸ்விக்கில் ஒரு மருத்துவமனையும் அதிகமான அளவில் உப்பு நீர் கலக்கப்பட்ட இரண்டு புற்றுநோய் மருந்துகளை வாங்கிவிட்டதாகவும் அதைத் தற்போது கண்டுபிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சைக்ளோஃபாஸ்ஃபமைடும், ஜெம்சிட் டாபைனும் கூடுதலாக இருபது சதவீதம் உப்புநீர் கலக்கப்பட்டு நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து ஓராண்டாக நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒண்ட்டேரியோ மாநிலத்தில் உள்ள பீட்டர் பரோவில் உள்ள ஒரு பரிசோதனைக்கூடத்தின் பணியாளர் இந்த மருந்தின் நீர்த்தன்மையை சோதித்து அறிந்தார். பின்னர் தான் உண்மை உலகிற்குத் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட ஐந்து மருத்துவமனைகளும் ஒரே மருந்து நிறுவனத்தில் இருந்துதான் இந்த இரண்டு மருந்துகளையும் வாங்கியுள்ளது. இப்போது அந்த நிறுவனம் மூன்று வழக்குகளைச் சந்தித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளான மருந்தாளுநர் கல்லூரி, ஒண்ட்டேரியோ புற்றுநோய் மையம், ஹெல்த் கனடா, புருன்ஸ்விக் அரசு மருத்துவமனை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு, இந்த கலப்படக் குற்றத்தை ஆராய்ந்து வருகின்றது.

இனி வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்பொழுதும் நோயாளிகளை எப்படி காப்பாற்ற வேண்டும் என்றும் ஆராயத் திட்டமிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top