புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகள் முடங்கின.


டோக்கியோவுக்கு மேற்கே உள்ள அவாஜி தீவை மையமாக கொண்டு 6 புள்ளி என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் கோபெ நகரில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. இதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் உள்ளூர் ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

அத்துடன் கன்சாய் விமான நிலையமும் உடனடியாக மூடப்பட்டது. இதனிடையே ஜப்பானின் மின் தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான ஒய் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1995-ல் கோபே நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதேபோல் 2011 ஆம் ஆண்டில் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவான நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top