புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இஸ்ரேலில் ஆஷ்கெலான் நகரில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது, ஹாமி யோவ் என்ற இடத்தில் வயின் தொழிற்சாலை ஒன்று புதையுண்டு கிடந்ததை கண்டுபிடித்தனர்.

அத்துடன், செராமிக்கால் வடிவமைக்கப்பட்ட சிறிய கிறிஸ்தவ தேவாலயமும், அதில் சிலுவைகளும் இருந்தன. எனவே, அந்த தொழிற்சாலை ஒரு கிறிஸ்தவருக்கு சொந்தமாக இருந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

அந்த வயின் தொழிற்சாலையில் திராட்சை தோட்டத்தில் இருந்து திராட்சைகளை கொண்டு வந்து சாறுபிழிந்து அதை ஊற வைத்து வயின் தயாரித்தற்கான அடையாளங்கள் உள்ளன.

இந்த தொழிற்சாலை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை என கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர ஆஷ்கெலான் நகரிலும் இதுபோன்று மண்ணில் புதைந்து கிடந்த 3 வயின் தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top