புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா -சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரின் மனைவி சாந்தி (வயது 40). முதல் கணவனிடம் இருந்து பிரிந்த சாந்தி, சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியனுடன், ஆலமரத்துக்காடு பகுதியில் உள்ள லெட்சுமி
நாராயணா அப்பார்ட்மென்டில் வாழ்ந்து வந்தார்.

பாலசுப்ரமணியனும் ஏற்கனவே திருமணமானவர். இவர்கள் இருவரும் வெளி மாநிலங்களில் இருந்து பல பெண்களை அழைத்துவந்து, தங்கியிருந்த வீட்டிலேயே விபசாரம் நடத்தினர். இதற்காக புரோக்கர்கள் சிலரையும் சாந்தி நியமித்தார். சேலத்தில் பல பிசினஸ்மேன்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், சாந்தியிடம் நெருக்கமானார்கள். காவல் துறையிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, அடிக்கடி வீடு மாற்றுவார்கள்.

இந்த நிலையில் கடந்த மார்ச், 26ம் திகதி இரவு மர்ம நபர்கள் சாந்தியை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய, தனிப் படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சாந்தியை கொலை செய்தது, சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தை சேர்ந்த முரளி (23), பால்பண்ணை இரட்டை கரட்டை சேர்ந்த விஜய்குமார் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்யும் பணியில் பொலிசார் தீவிரம் காட்டினர்.

பொலிசார் தங்களை சந்தேகப்படுவதை அறிந்த இருவரும் திருப்பூருக்கு தப்பினர். தகவல் அறிந்த தனிப்படை பொலிசார் திருப்பூரில் வைத்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இருவரும் கூறிய விபரம்: கடந்த ஆண்டு பொலிசார், சாந்தியை விபச்சார வழக்கில் பொலிசார் கைது செய்த போது, அதை நாங்கள் பார்த்தோம். அதன் பின்னர் அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம்.

ஆலமரத்துக்காடு பகுதிக்கு சாந்தி குடியேறிய நிலையில், அவருடன் தலா, 700 ரூபாய் பேசி, உல்லாசம் அனுபவித்தோம். அதன் பின்னர் அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளோம். மார்ச் 26ம் தேதி இரவு அவரது வீட்டுக்குச் சென்றோம். அவர் ஒவ்வொருவருக்கும், 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றார். ஆனால், நாங்கள் பணத்தை குறைக்க கோரினோம்.

பணத்தை குறைக்க மறுத்த அவர் 1,000 ரூபாய் சம்மதம் என்றால், என்னுடன் உல்லாசமாக இருங்கள், இல்லை என்றால், இடத்தை காலி செய்து விட்டு போங்கள் என்றார். ஆனால், நாங்கள் மது அருந்தி இருந்ததால் வாக்குவாத்தில் ஈடுபட்டோம். அப்போது பணம் இல்லாமல் என்னிடம் ஏன் வந்தீர்கள், உங்கள் அம்மாவிடம் போக வேண்டியது தானே என்றார். இதனால், ஆத்திரமடைந்த நாங்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, சாந்தி கீழே விழுந்தார்.

ஆத்திரத்தில் சமையில் அறையில் காய் நறுக்க பயன் படுத்தப்படும் கத்தியை எடுத்து கழுத்தில் குத்திவிட்டோம். அவர் இறந்து விட்டது தெரிய வரவே, கழுத்தில் அணிந்திருந்த நகை, பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டோம். பின்னர் தான் தெரிய வந்தது, அனைத்தும் கவரிங் நகை என்பது.

இதனால், ஏமாற்றம் அடைந்த நாங்கள், நீதிமன்றத்தில் சரண் அடைய திட்டமிருந்த நிலையில், பொலிஸில் சிக்கி விட்டோம். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். 300 ரூபாய்க்காக நடந்த கொலை என்பது ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், கொலையாளிகளால் எடுத்துச் செல்லப்பட்ட நகைகள் அனைத்தும் உண்மையிலேயே, கவரிங் நகைகள் தானா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top