புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் அவர் மனைவி மிடில்டனுடன் ஸ்காட்லாந்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதில், கிளாஸ்கோவில் அமைந்துள்ள எமிரேட்ஸ்
அரினா விளையாட்டு அரங்கை சுற்றிப் பார்த்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுடன் உரையாற்றியுள்ளனர்.

அப்போது சோனா ரிட்சி என்ற 4 வயது சிறுமி வில்லியம்சிடம் முத்தம் கேட்டுள்ளாள். அதற்கு ஒப்புக்கொண்டு கன்னத்தில் முத்தமிட குனியும்பொழுது அந்தக் குழந்தை வெட்கப்பட்டு முத்தத்தை ஏற்காமல் விலகிவிட்டது.

இதனை சற்றும் எதிர்பாராத இளவரசர் உட்பட அங்கு கூடியிருந்தோர் அனைவரும் சிரித்துவிட்டனர்.

தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும், மிடில்டனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப் போகிறீர்கள் என்று மக்கள் ஆர்வமாக கேட்டனர். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top