புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெங்களூர்-புனே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்ட்ட 20 ஓவரில் 263 ரன்கள்
எடுத்துள்ளது. ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் அதிரடியாக ஆடி 175 ரன்களை குவித்தார். ஐ.பி.எல் வரலாற்றில் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இன்றைய ஆட்டத்தில் மட்டும் கெய்ல் 17 சிக்சர்களை அடித்து சாதனை படைத்துள்ளார். புனே அணியின் பந்து வீச்சை ஈவு இரக்கமின்றி எல்லா திசைகளிலும் சிதறடித்தார். புனே அணியில் 5வது ஓவர் வீசிய மார்ஷ் ஓவரில் 28 ரன்களும், 8வது ஓவர் வீசிய பின்ஞ் ஓவரில் 29 ரன்களும் கெய்ல் அடித்து அசத்தினார். கெய்ல் சிக்சர் மழை பொழிவதால் புனே வீரர்களுக்கு பீல்டிங் செய்வது மிச்சம் ஆயிற்று. முன்னதாக டாஸ் வென்ற புனே அணி பந்து வீச முடிவு செய்தது. பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்களை எடுத்தது. இதனையடுத்து புனே வாரியர்ஸ் அணிக்கு 264 ரன்கள் வெற்றி இலக்காக பெங்களூர் அணி நிர்ணயித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top