புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவில் கடந்த 2007ம் ஆண்டு ஆஷ்லி ஸ்மித்(Ashley Smith) (19) என்ற பெண் பெற்றோர் மீது நம்பிக்கையில்லாமல் தற்கொலை மனப்பான்மையுடன் இருந்ததால் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்பொழுது அந்த சிறையிலுள் துண்டுகள் மூலம் தன் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கியுள்ளது.

ஸஸ்காட்டூனில்(Saskatoon) கிட்சனெர் என்ற ஊரில் உள்ள மாநில மனநோய்ச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த ஸ்மித் குறித்து அதன் தலைமை மனநல மருத்துவர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ஸ்மித்தின் அக்கா என்று சொல்லிக் கொள்பவர் உண்மையில் அவரது தாய் என்றும் அவரது வளர்ப்புத்தாய் என்று சொல்லி கொண்டிருக்கும் கோராலீ, அவரது பாட்டி எனவும் சிலர் சொல்லக் கேட்டு ஸ்மித்க்கு குடும்ப உறவுகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

தன்னைப் பெற்ற தாய் தன்னை மகளே என்று அழைக்க மறுப்பது ஏன் என்பது குறித்து ஸ்மித் மனதுக்குள் அடிக்கடி குழப்பம் அடைந்துள்ளதை அடுத்து அதிக மன அழுத்ததிற்கு ஆளாகியுள்ளார். தான் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று முடிவு எடுத்த ஸ்மித் சிறைக்காவலில் கண்காணிப்பில் இருந்தும் தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

இவர் தற்கொலை செய்யும் காட்சி சிறையிலிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்ததை நீதிபதிகள் பார்வையிட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top