புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டனின் சிறந்த தந்தை என்று கடந்த 2010ம் ஆண்டில் விருது பெற்ற கீத் பிரடீ(Keith Preddie) என்பவர் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பொருட்கள் வாங்கப் சென்றபொழுது தன் மனைவி எம்மா பிரடீ (Emma Preddie) மீது கடும் கோபம்
கொண்டு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
எனவே கீத் பிரடீ(44) மீது குடும்ப வன்முறை வழக்கு தொடரப்பட்டது. குரோய்டான் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் மனைவி எம்மாவுக்கு 100 பவுண்ட் இழப்பீடாக வழங்கும்படி தீர்ப்பளிக்கப்பட்டது.

கீத் பிரடீ தன் மனைவி மீது பொருட்களை வீசி எறிந்தும் தரையில் தள்ளி அடித்தும் இருக்கிறார். கடந்த டிசம்பர் 18ம் திகதி அன்று இவரது 12 வயது மகள் இவரது வன்முறை சத்தத்தில் தூக்கம் விழித்து பதறிப்போய் எழுந்திருக்கிறார்.

வழக்கு விசாரணையின்பொழுது கீத் பிரடீ தலையைக் கவிழ்ந்து கொண்டு கண்ணீர் விட்டுள்ளார். இவர் மீது வேறு எந்தக் குற்றச்சாட்டும் பதிவாகியிருக்கவில்லை.

மேலும் இவர் முதியவர்களுக்காக சேவை செய்தும் இருக்கிறார். நீதிமன்றத்தில் பொதுமக்கள் பலரும் இவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

இவர் நீதிமன்றத்தில் தான் கோபப்பட்டதையும் மனைவியிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதையும் அவர் "கணநேர மனமாற்றம்" என்று காரணம் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top