புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டனில் காரனேஷன் ஸ்ட்ரீட் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தவர் வில்லியம் ரோச்.  (வயது 81).  இவர் கென் பார்லோ என்ற கதாபாத்திரத்தை தாங்கி நடித்து வந்தார்.  இந்நிலையில் இவர் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு எழுந்தது.  கடந்த 1967ம் ஆண்டு ஏப்ரல்
மற்றும் ஜூலை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலத்தில் அப்பொழுது 15 வயது நிறைந்த சிறுமி ஒருவரை இரு முறை கற்பழித்துள்ளார்.  இந்த வழக்கில் அவருக்கு எதிராக சாட்சியங்கள் பலமாக உள்ளன.  அவை கவனமுடன் பரீசிலிக்கப்பட்டு உள்ளன என்று தலைமை வழக்கறிஞர் நசீர் அப்சல் என்பவர் தெரிவித்தார்.

சாட்சியங்களை நன்கு ஆராய்ந்து அதனடிப்படையில் லங்காஷைர் காவல் நிலைய போலீசாரிடம் கடந்த மார்ச் 1ந் தேதி முதல் இது குறித்து ஆரம்ப விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தோம் என்றும் அவர் கூறினார்.  மேலும் எங்களது ஆய்வு முடிவில் அவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதுமான சாட்சியங்கள் இருந்தன என்பது தெரிய வந்தது.  எனினும் அவர் மீது வழக்கு பதிவது என்பது பாதிக்கப்பட்டவர்களின் தரப்பை சார்ந்தது என கூறியுள்ளார்.  ரோச் மீதான வழக்கு வருகிற மே 14ந் தேதி விசாரணைக்கு வரும் என தகவல் தெரிவிக்கின்றது.  நீண்ட காலமாக தொடரில் நடித்து வந்ததற்காக ரோச் கின்னஸ் உலக சாதனை விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top