புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, துருக்கியின் பிரதமர் பதவியில் இருக்கும் ரீசெப் டையின் எர்டொகென் இஸ்லாமியக் கோட்பாடுகளை உடைய கட்சியின் பிரதிநிதி ஆவார். துருக்கி ஒரு
மதசார்பற்ற நாடாக விளங்கியபோதிலும், இவர் தனது அரசின் அணுகுமுறைகளால் மக்களை பழமைவாதிகளாகவும், சமயப் பற்றுள்ளவர்களாகவும் மாற்ற முயற்சிக்கின்றார் என்ற விமர்சனங்கள் எழுவதுண்டு.

அதற்கேற்றார்போல், துருக்கி விமானப் பணிப்பெண்கள் பிரகாசமான வண்ணங்களில் உதட்டுச்சாயம் பூசுவது தடை செய்யப்படுகின்றது என்ற பிரதமரின் அறிவிப்பு, நாட்டை இஸ்லாமிய சார்பு நாடாக மாற்ற முயற்சிப்பதன் வெளிப்பாடு என்ற தீவிர வாக்குவாதங்களை எழுப்பியுள்ளது.

இதனை எதிர்க்கும்விதமாக, பெண்கள் பலரும் இணையதளத்தில் பளீச்சிடும் வண்ணங்களில் உதட்டுச்சாயங்களுடன் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர். ஆயினும் பணிபுரியும் இடத்தில் எளிமையான ஒப்பனையும், மென்மையான நிறங்களில் உதட்டு சாயங்களும் இருந்தாலேபோதும் என்று விமான நிறுவனமும் பிரதமரின் செய்கையை ஆமோதித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், முழங்கால் தெரியும் அளவில் இருந்த இவர்களது சீருடைகள் மாற்றப்பட்டு, பாரம்பரியமான நீளமான ஸ்கர்ட்டுகளும், நீளத் தொப்பிகளும் செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டன. மேலும் வளர்ந்து வரும் உள்நாட்டு விமானசேவைகளில் சமீப காலமாக பயணிகளுக்கு மதுபானங்கள் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில் இதில் 49 சதவிகித பங்குகள் அரசின் வசம் உள்ளன. இதேபோல் பொது இடங்களில் மது அருந்துவதும் பரவலாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், தலையில், துணியால் மூடிசெல்லும் பழக்கத்தை தற்போது எங்கும் காண முடிகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top