புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி வழக்கில் கைதாகியுள்ளார். கடன் வாங்கி தருவதாக பல லட்சங்கள் கமிஷன் பெற்று ஏமாற்றி விட்டதாக அவர் மீது மேலும் பல புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பவர் ஸ்டார் சீனிவாசன் மீது தீவிர
விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பவர் ஸ்டார் சீனிவாசன் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் அக்குபஞ்சர் கரஸ்பாண்டில் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2-வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவருக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசையும், சனிமா தொழிலில் புகுந்து பிரபலமாக வேண்டும் என்று ஆசையும் இருந்து வந்துள்ளது.

மேலும் கிளினிக் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அதற்காக அக்குபஞ்சர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் பாபா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் கடன் பெற்று தருவதாகவும், கடன் கொடுப்பதாகவும் அதற்காக கமிஷன் பெற்று வந்துள்ளார். இவருக்கு பலர் புரோக்கர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாக பல ஊர்களில் இருந்தும் தொழில் செய்பவர்கள் இவரிடம் அணுகி கடன் ஏற்பாடு செய்ய அணுகியும் அதற்கு பல லட்சம் பணம் பெற்று எந்தவித கடன் கொடுக்காமலும் பணம் திரும்ப கொடுக்காமலும் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

மேலும் இவர் தன்னை வைத்து சினிமா படம் லத்திகா, இந்திரசேனா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை எடுத்து பல கோடி செலவு செய்துள்ளார். இவர் மேலும் பல கோடி சொத்துக்களை அண்ணாநகரில் வாங்கி உள்ளதாக தெரியவருகிறது.

மேலும் இவர் எங்கெல்லாம் சொத்து வாங்கியுள்ளார் என்ற விவரம் சேகரித்து வருகின்றனர். இவர் பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top