புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

 திருநள்ளாறு அருகே உள்ள அகலங்கண்ணு கிராமம், கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (வயது 30). இரவு கணவன், மனைவி வீட்டில்
படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 11.45 மணியளவில் வீட்டின் உள்ளே யாரோ குதித்தது போன்று சப்தம் கேட்டு ஜோதி திடுக்கிட்டு எழுந்தார்.

வீட்டுக்கூரையின் ஒருபகுதியை யாரோ பிய்த்து அதன் வழியாக வீட்டினுள் குதித்துள்ளது தெரிய வந்தது. எனவே அவர் விளக்கை போட்டு பார்த்தபோது, மேலத்தெருவை சேர்ந்த சங்கர் என்பவர் அவரது வீட்டினுள் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது ஜோதியை பார்த்து, வா உல்லாசமாக இருக்கலாம் என்று சங்கர் அழைத்ததாக கூறப்படுகிறது.

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி, என் கணவரை எழுப்பி விடுவேன், மரியாதையாக இங்கிருந்து போய்விடு என்று எச்சரித்தார். ஆனால், நீ உன் கணவரை எழுப்பினால் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என்று சங்கர் மிரட்டினார்.

சப்தம் கேட்டு ஜோதியின் கணவர் முருகானந்தம் எழுந்ததும் சங்கர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சம்பவம் குறித்து ஜோதி, திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருமாள், ஏட்டு பன்னீர்செல்வம் ஆகியோர் சங்கர் மீது கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி ஜெயந்தி உத்தர விட்டார்.

அதனையடுத்து போலீசார் சங்கரை காரைக்கால் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் சங்கருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளான். அவரது மனைவி சிறிது காலத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
 
Top