புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அந்தமான் தீவுகளில் ஜாரவாஸ் என்ற ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களே ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து முதன் முதலாக இடம்பெயர்ந்தவர்களாக அறியப்படுகின்றார்கள்.
அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்கள் இவர்களை நேரில் சென்று பார்ப்பதும் சுற்றுலா பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.  

சுற்றுலா செல்பவர்கள் இது போன்று ஆதிவாசிகளை வேடிக்கை பார்ப்பதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சர்வைவர்ஸ் இன்டர்நேஷனல் கால் என்ற இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த அமைப்பு இதுபோல் ஆதிவாசிகளையும்  அவர்களின் வாழ்க்கைமுறைகளையும் சுற்றுலாவின் போது  மற்றவர்களுக்கு காண்பிக்கும் வழக்கத்தை கண்டிப்பதோடு, இந்த அமைப்பின் இயக்குனர் ஸ்டீபன் கோர்ரி, இத்தகைய சுற்றுலாக்கள் ஒரு நாட்டினுடைய நற்பெயரைக் கெடுத்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

ஆதிவாசிகளை வேடிக்கை பார்க்கும் சுற்றுலாக்களை அந்தமான் தடை செய்யும்வரை, மற்ற சுற்றுலா நிறுவனங்களும் அங்கு செல்வதைத் தவிர்க்கவேண்டும் என 200 சுற்றுலா நிறுவனங்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த  டிராவல்பிக்கர்ஸ் நிறுவனம், இந்த காரணத்திற்காக அந்தமான் செல்லும் 40 பயணங்களை ரத்து செய்ததாக தெரிவித்துள்ளது. மற்றொரு புகழ் பெற்ற நிறுவனமான ஓரிக்சா வையடேஜஸ், மக்களின் பாரம்பரியம் சிறந்தமுறையில் பாதுகாக்கப்படவேண்டும் என்றும், மனசாட்சியற்ற மனிதர்கள் இதனை வைத்துப் பணம் சம்பாதிப்பது தடுக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.  

ஆதிவாசிகள் வாழும் இடங்களின் வழியே சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். என்றும், அதற்குப்பதிலாக கடல்வழி ஒன்று பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகும். சர்வைவர்சின் வேண்டுகோளுக்கு இணங்கி 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்களின் அந்தமான் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
 
Top