
தாய், தந்தையர், சகோதர, சகோதரியரை கூலிக்கு அமர்த்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 20 பெண்களை திருமணம் செய்து கொண்ட நபர் ஒருவரை பத்தேகம பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்களிடமிருந்து 75 இலட்ச ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபரிடம் பல பெயர்களுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகளும், விவாகச் சான்றிதழ்களும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
48 வயதான கிங்தொட்ட கமகே சாந்த குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்திரிகை பிரசூரிக்கப்படும் மணமகன் தேவை விளம்பரங்களை பார்வையிட்டு பெண்களை ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
35 வயதுக்கு மேற்பட்ட இருபது பெண்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக