புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அவுஸ்தி­ரே­லி­யாவில் மேரி குண்ட்ரம் என்ற பெண்­ணுக்கு பிறந்த குழந்­தைக்கு மூக்­கிற்கு அருகில் இருந்த மூளை தற்­பொ­ழுது சத்­திர சிகிச்­சையின் பின் அகற்­றப்­பட்டு உரிய இடத்தில் பொருத்­தப்­பட்­டுள்­ளது.


அவுஸ்தி­ரே­லிய பெண்­ணுக்கு கர்ப்பம் தரித்து சில மாதங்­க­ளுக்குப் பிறகு தான், வயிற்றில் குழந்­தையின் குறை­பாடு தெரிய வந்­தது. இது தொடர்­பாக இணை­யத்தில் ஆராய்ந்த போது, அவ­ளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. அதா­வது, அத்­த­கைய குறை­பா­டுடன் பிறக்கும் குழந்­தைகள் சில மணி நேரங்­க­ளி­லேயே இறந்து விடும் என்­பது தான் அது.

குழந்­தையின் அசா­தா­ரண தன்மை தாயின் வயிற்றில் ஐந்து மாத கரு­வாக இருந்­த­போது தான் கண்டு பிடிக்­கப்­பட்­டது. ஆனால், குறையை சரி செய்ய அப்­போது இய­ல­வில்லை.

மூக்கின் வழி­யாக வெளிவந்த மூளை­யுடன் பிறந்த டோம்­னிக்­கிற்கு உட­னடி உயிர் ஆபத்து ஏதுவும் ஏற்­ப­ட­வில்லை என்­றாலும், மூளை வெளியே இருந்­ததால் விரை­வாக நோய்த்­தொற்று ஏற்­படும் அபாயம் இருப்­ப­தாக மருத்­து­வர்கள் எச்­ச­ரித்­தனர்.

ஏழு மாதம் முடி­வ­டைந்த நிலையில் குழந்­தைக்கு சத்­திர சிகிச்சை செய்ய முடிவு செய்­தனர் மருத்­து­வர்கள். பின்னர், அதில் உள்ள சாதக, பாத­கங்­களை அலசி ஆராய்ந்­தனர்.

பொஸ்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மருத்­து­வர்­களின் முயற்­சியால் சத்­திர­ சி­கிச்சை மூலம் இவ­ரது மூளையை மண்­டை­யோட்­டுக்குள் உரிய இடத்தில் வைத்து தைத்து சாதனை புரிந்­துள்­ளனர்.

இதற்கு முன்­ன­தாக இதே போன்று செய்­யப்­பட்ட சத்­தி­ர­சி­கிச்சை ஒன்­றிற்கு கிட்­டத்­தட்ட 20 மணி நேரம் பிடித்­த­தா­கவும் ஆனால், டோம்­னிக்­கிற்கு கிட்­டத்­தட்ட ஆறு மணி நேரத்தில் சுமார் 36 வகையான படிகளின் முறைமையில் இந்த சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பெருமையுடன் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.
 
Top