புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவில், ஆறு வயது திருநங்கைச் சிறுமிக்கு பள்ளியில் பெண்கள் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி அளிக்கும்படி கொலராடோ சிவில் உரிமைகள் பிரிவு உத்தரவிட்டுள்ளது.


பிறப்பில் ஆணான காய் மேதிஸ், தன்னை ஒரு பெண்ணாக சமூகம் அங்கீகரிக்க வேண்டுமென கருதினார்.6 வயது சிறுமியான இவர் கொலரோடாவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

பாலின சிக்கலால் பாதிக்கப்பட்ட இவர், பிறக்கும்போது ஆணாக இருந்தாலும் தற்போது பெண்கள் அணியும் உடை, உபயோகிக்கும் விளையாட்டு பொருட்களென முற்றிலுமாக ஒரு சிறுமியாக மாறியுள்ளார்.

இந்நிலையில், மேதிஸ் படிக்கும் பள்ளியில் அவர் பெண்களுக்கான கழிவறை உபயோகிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைக் கேட்டு ஆவேசமடைந்த மேதிஸின் பெற்றோர்கள் இது குறித்து பள்ளியில் முறையிட்டுப் பார்த்தனர். ஆனால் அவர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால், பிரச்சனையை அவரது பெற்றோர் கொலராடோ சிவில் உரிமைகள் பிரிவுக்கு கொண்டு சென்றனர்.

பிரச்சனையை ஆராய்ந்த கொலராடோ சிவில் உரிமைகள் பிரிவு, மேதிஸ் பெண்கள் கழிவறையைப் பயன்படுத்த உத்தரவிட்டு பள்ளிக்கு ஆணை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தெரிவத்த சமூக ஆர்வலர்கள், பாலின சிக்கல் தொடர்பான பிரச்சனைகளை சரியான முறையில் சிறுமி படிக்கும் பள்ளி நிர்வாகம் புரிந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தனர்.

தனது மகளுக்கு முறையான உரிமைகள் அளிக்கபட்டதை நினைத்து மகிழ்ச்சி தெரிவித்த அவரது தாய் கத்ரின் மேதிஸ், எங்கள் குழந்தையை அவரது விருப்பம் போல ஒரு பெண்ணாக பள்ளி நிர்வாகம் எற்றுக்கொள்ளவேண்டுமேனவே நாங்கள் விரும்பினோம்,தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பால் அவரும் மற்ற பெண் குழந்தைகளைப்போல நடத்தப்படுவார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top