
வேலூர் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் ஒரு வீட்டில் ஒரு இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக அடைத்து வைத்திருப்பதாகவும், அங்கிருந்து அழுகை சத்தம் கேட்பதாகவும் பொதுமக்களிடம் இருந்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.
மனநிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் பெயர் கீதா, வயது 30. தாய் தந்தையை இழந்ததால் மன நிலை பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார். இலக்கியத்தில் பட்டப்படிப்பு படித்த இந்தப் பெண் ஆசிரியையாக இருந்து வந்துள்ளார்.
அவரின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவரும் வேலைக்கு சென்று வருவதால் அவரை கடந்த 3 ஆண்டுகளாக சாப்பாடு கொடுத்து தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இதனால் அவருக்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து எங்களுக்கு சமூக நல அமைப்பிடம் இருந்தும் புகார் வந்ததால் அந்த பெண்ணை மீட்டுள்ளோம். மனநிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன் செல்ல மறுத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் அந்த பெண்ணின் உடல் நிலை மோசமாக உள்ளதால் அவரை காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக