புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

முன்விரோதம் காரணமாக எதிரி மீது கொடூரமாக காரை ஏற்றிக் கொன்றவரின் தலையை துண்டித்து சவுதி அரேபியா அரசு நேற்று மரண தண்டனையை நிறைவேற்றியது.

ஷுவைல் அல்-அம்ரி என்பவருக்கும் அவரது உறவினரான முஹம்மது அல்-அம்ரி என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்தது. முஹம்மது அல்-அம்ரியை நீண்ட காலமாகவே தீர்த்துக்கட்ட நினைத்த ஷுவைல் அல்-அம்ரி, அவர் மீது காரை ஏற்றிக் கொன்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரியாத் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஷுவைல் அல்-அம்ரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் சவுதியின் தென்மேற்கு பகுதியான அல்-பஹாவில் ஷுவைல் அல்-அம்ரியின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், மத துவேஷம் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கம்.

ஷுவைல் அல்-அம்ரியையும் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top