புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியா-புதுவை முத்திரையர் பாளையம் அணைக்கரை வீதி கோவிந்தன் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான பரசுராமனின் மகள் இளைய பாரதி சற்று மனநலம் குன்றியவர்.

நேற்று காலை பரசுராமனும் இவரது மனைவி இந்திராவும் வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது இரு மகன்களில் விக்னேஷ் பள்ளி சென்றிருந்தார், வெங்கடேசன் வெளியில் சென்று இருந்தார்.

இளையபாரதி தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். தாத்தாவுக்கு கண் தெரியாது. இந்நிலையில் பாட்டியும் வெளியே சென்ற சமயம் பக்கத்து வீட்டை சேர்ந்த குமார் தனது நண்பருடன் வந்து குடிக்க தண்ணீர் கேட்டார்.

அவர்களுக்கு இளையபாரதி குடிக்க தண்ணீர் கொடுத்த போது வீட்டில் ஆள் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குமார் அவரை கொடூரமாக கற்பழித்துள்ளார். அதன் பின் அவரது நண்பரும் கற்பழித்துள்ளார்.

இதில் திணறிய இளைய பாரதி இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பிணத்தை மறைக்க திட்டமிட்டனர்.

இளைய பாரதியின் வீட்டின் பின்புறம் இருந்த தென்னந்தோப்பு அருகில் உள்ள கழிவுநீர் ஓடையில் குழி தோண்டி புதைத்தனர்.

அந்த நேரத்தில் அங்கு அடிக்கடி ஆள் நடமாட்டம் இருந்ததால் அவசர அவசரமாக அரை குறையாக பிணத்தை புதைத்து அதன் மீது குப்பை மற்றும் தென்னை மட்டைகளை போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

பிணத்தை புதைக்கும் முன்பு இளைய பாரதி அணிந்திருந்த கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவற்றை எடுத்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் வீட்டுக்கு திரும்பிய பாட்டி சுற்றுவட்டார பகுதியில் இளைய பாரதியை தேடியுள்ளார். பின்பு பக்கத்தில் எங்காவது போயிருக்கலாம் எனக் கருதி தேடாமல் இருந்தார்.

மதியம் 3 மணிக்கு மேலாகியும் இளைய பாரதியை காணாமல் அதிர்ச்சியடைந்த பாட்டி அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் இளைய பாரதி காணாமல் போன தகவலை கூறி தேட தொடங்கினார்.

அக்கம் பக்கத்தினர் பாட்டியுடன் சேர்ந்து தேடினர். அப்போது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் குப்பைக்கு இடையே இளையபாரதி அணிந்திருந்த உடை தெரிந்தது.

இதனையடுத்து அங்கு தோண்டி பார்த்தனர். அங்கு இளைய பாரதி புதைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மேட்டுப் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சமயத்தில் அந்த வழியாக பக்கத்து வீட்டு வாலிபர் குமார் சென்றார். அவர் மீது அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் போலீசில் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் குமாரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் குமார் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். பின்னர் உரிய முறையில் விசாரணை செய்த போது உண்மையை ஒப்புக்கொண்டார்.

தனது நண்பருடன் சேர்ந்து இளைய பாரதியை கற்பழித்த போது இறந்து விட்டதால் புதைத்ததாக கூறினார். இதனையடுத்து போலீசார் குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நண்பரை வலைவீசி தேடிவருகின்றனர்.

தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலைமறியல் செய்தனர். பட்டப்பகலில் இளம் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top