புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது.காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட இலவசமாக கிடைக்கப் பெறும் மென்பொருட்களில்
உள்ளது.

Google Chrome 16: இணைய உலாவிகளில் வெளியிட்ட சில ஆண்டுகளிலேயே மிகப்பரவலாக உலகம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஒரு இணைய உலாவியாகும்.

இந்த உலாவியின் எளிமையான தோற்றமும் வேகமான செயல் திறனாலும் அனைவரும் இந்த உலாவியை விரும்பி பயன்படுத்துகின்றனர். இப்பொழுது உள்ள உலாவிகளில் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ள ஒரே உலாவி இது தான்.

மற்ற உலாவிகள் இதன் வருகையால் சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இந்த மென்பொருள் கூகுளில் தயாரிப்பு என்பது இதன் கூடுதல் பலமாகும். தற்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை chrome 16 வெளியிட்டு உள்ளனர்.

Firefox 9: உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலாவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது).

கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாக திகழ்கிறது.

தரவிறக்க (கூகுள்)--https://www.google.com/chrome
தரவிறக்க (FIREFOX )-- http://www.mozilla.org/en-US/firefox/all.html

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top