புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒரு நாள் ஒரு ஆமை நடந்து போவதைப் பார்த்து அவ் வழியால் வந்த ஒரு முயல் சிரித்தது. "ஏன் சிரிக்கின்றாய்" என்று ஆமை முயலிடம் கேட்டது. "நீ சரியான மெதுவாக நடக்கின்றாய்" என்றபடி முயல் மீண்டும் பலமாகச் சிரித்தது. கோபமடைந்த ஆமை முயலிடம், "என்னுடன் ஓட்டப்பந்தயத்திற்கு உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது. முயலும் சிரிப்பை அடக்கிக்கொண்டு
"சரி வருகிறேன்" என்றது.


தூரத்தில் தெரியும் ஒரு மரத்தை இலக்காகக் கொண்டு முயலும் ஆமையும் தங்களது ஓட்டப்
போட்டியை ஆரம்பித்தன. முயல் வேகமாக ஓடியது. ஆமையும் சளைக்காமல் ஓடியது. முயல்
இடையில் ஓடுவதை நிறுத்தித் திரும்பிப் பார்த்தது. ஆமையைக் காணவேயில்லை. கொஞ்ச
நேரம் படுத்து இளைப்பாறலாம் என்றெண்ணியது. அப்படியே அது நித்திரையாய்ப் போனது.

ஆமை நிற்கவில்லை. மெது மெதுவாகவே ஓடிக்கொண்டிருந்தது. நிற்காமல் ஓடிப் போட்டியின்
முடிவை அடைந்தபின்தான் நின்றது. முயல் கொஞ்ச நேரத்தால் நித்திரை விட்டெழுந்து பார்த்தது.
ஆமை வெற்றி பெற்று விட்டதைக் கண்டது. தான் தொடங்கிய வேலையை முடிக்காமல் வேறு
விடயத்தில் கவனம் செலுத்தியதால், தான் தோற்றுவிட்டதை உணர்ந்து முயலுக்கு வெட்கமாகப்
போய்விட்டது.
விடா முயற்சி வெற்றி தரும்



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top